26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தின் போது வரும் வாந்தியைத் தடுக்க உதவும் உணவுகள்!!!

ori_pc_46334-img-2015-01-29-1422533552-vomitingகர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும், குமட்டலும் தான். கர்ப்ப காலத்தில் வாந்தியும் குமட்டலும் இயல்பான ஒரு அங்கமே; குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் தான். சொல்லப்போனால், கர்ப்ப காலத்தில் 65%-க்கும் அதிகமாக இந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் வாந்தியும் குமட்டலும் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை. இருப்பினும் உடலில் ஏற்படும் வேகமாக ஹார்மோன் மாற்றங்களால் வயிற்று தசை சுருங்கி நீட்சியடையும். இதனால் தான் வாந்தியும் குமட்டலும் ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. குறிப்பிட்ட சில வாசனைகள், சில உணவுகள், சோர்வு, பதற்றம், உணர்ச்சிமிக்க வயிறு, கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் குறைபாடு ஆகிய காரணங்களாலும் கூட வாந்தியும் குமட்டலும் ஏற்படுகிறது.

குமட்டலும் வாந்தியும் விடியற்காலையில் வரலாம். இதனால் அன்றைய பொழுதின் வேலைகள் பாதிக்கப்படலாம். சில பெண்களுக்கு இதன் அறிகுறிகள் பகல் நேரத்திலும் ஏற்படலாம். பல பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தோடு இந்த பிரச்சனை நின்று விடும். சிலருக்கு இன்னும் சிறிது காலம் நீடிக்கலாம். இந்த அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.

இது உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களை வெகுவாக பாதிக்கும். ஆனால் இந்த பிரச்சனையை சுலபமாக கையாளலாம்; அதுவும் எளிய வீட்டு சிகிச்சைகள் மற்றும் வாழு முறையில் சில மாற்றங்களோடு. இப்போது கர்ப்ப காலத்தின் போது வாந்தியைத் தடுக்க உதவும் உணவுகள் பற்றிப் பார்க்கலாமா…?

தண்ணீர் குடியுங்கள் வாந்தி, குமட்டல் என வந்து விட்டால் தண்ணீர் தான் அதற்கு சிறந்த மருந்தாக விளங்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பெண்களுக்கு வாந்தியும் குமட்டலும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் உள்ள சிசுவிற்கும் இது முக்கியமாகும்.

ஆகவே உங்கள் படுக்கைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக் கொள்ளவும். காலை எழுந்தவுடன் அதனை கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள். உங்கள் வயிறு செட்டாகும் வரை பொறுத்திருக்கவும். பின் படுக்கையை விட்டு எழுந்திருக்கவும். மேலும் நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் மனநிலை மற்றும் செரிமானத்தை மேம்படுத்தி, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

எலுமிச்சை கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தியை கையாள எலுமிச்சையும் உதவும். அதன் இதமளிக்கும் வாசனை, உங்கள் உடலை இயற்கையான முறையில் அமைதிப்படுத்தும். இதனால் குமட்டல் குறைந்து, வாந்தி தடுக்கப்படும். கூடுதலாக அதிலுள்ள வைட்டமின் சி கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக நல்லதாகும்.

நற்பதமான் எலுமிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தி மற்றும் குமட்டலை தடுத்திடுங்கள். நற்பதமான எலுமிச்சை துண்டுகளை முகர்ந்தும் கூட பார்க்கலாம்.

இது கர்ப்ப காலத்தின் போது வாந்தியையும் குமட்டலையும் குறைக்கும். சிறிதளவு எலுமிச்சை அதிமுக்கிய எண்ணெய்யை உங்கள் கைக்குட்டையில் தடவி கொள்ளுங்கள். வாந்தி அல்லது குமட்டல் உணர்வி ஏற்படும் போது அதனை முகர்ந்து கொள்ளுங்கள். எலுமிச்சை மிட்டாயும் கூட உதவும்.

புதினா கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்க உதவும் மூலிகைகளில் புதினாவும் ஒன்றாகும். இது வயிற்றை இதமாக்கி அதனால் குமட்டலை குறைக்கும். அதற்கு 1 டீஸ்பூன் உலர்ந்த புதினாவை ஒரு கப் வெந்நீரில் போடவும். அதனை 5-10 நிமிடம் வரை மூடி வைக்கவும். பின் வடி கட்டி, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை அல்லது தேனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் இந்த டீயை பருகுங்கள். மற்றொரு வழியும் உள்ளது – சில துளிகள் புதினா அதிமுக்கிய எண்ணெய்யை உங்கள் கைக்குட்டையில் ஊற்றி, குமட்டல் உணர்வு ஏற்படும் போதெல்லாம் அந்த வாசனையை முகர்ந்து பாருங்கள். குறிப்பு: சில பெண்களுக்கு புதினா வாசனை குமட்டலை தூண்டலாம். அப்படிப்பட்ட சூழல்களில் இதனை தவிர்க்கவும்.

பெருஞ்சீரகம் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலுக்கு சிகிச்சை அளிக்க மற்றொரு சிறந்த வழியாக விளங்குகிறது பெருஞ்சீரகம். இது செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான பாதையின் உட்பூச்சை அமைதிப்படுத்தும். இதனால் வாந்தி எடுக்கும் உணர்வு குறையும். கூடுதலாக, வாசனை மிக்க இது வயிற்றுக்கு இதமளிக்க உதவும்.

கொஞ்சம் பெருஞ்சீரகத்தை படுக்கையில் அருகில் வைத்துக் கொண்டு, குமட்டல் ஏற்படும் போது அதனை வாயில் போட்டு மெல்லவும். 1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கப் வெந்நீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை மூடி விட்டு, 10 நிமிடங்களுக்கு ஆற விடவும். பின் அதனை வடிகட்டி, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் மெதுவாக குடிக்கவும்.

பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ணவும் காலை எழுந்த உடனேயே பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனிகளை உட்கொண்டால், கர்ப்ப காலத்தின் போது குமட்டலை நிறுத்தவும் வாந்தியை தடுக்கவும் உதவும். இந்த பிஸ்கட்களில் கார்போஹைட்ரேட்ஸ் வளமையாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் குவிந்துள்ள அமிலத்தில் வயிற்றை ஊற வைக்கும்.

உங்கள் படுக்கையின் அருகில் ஒரு டப்பா பிஸ்கட்டை வைத்துக் கொள்ளவும். காலை எழுந்தவுடன் அதனை கொஞ்சம் சாப்பிடவும். செரிமானத்திற்கு சிறிது நேரம் அளியுங்கள். பின் மெதுவாக படுக்கையை விட்டு எழுந்திரியுங்கள். பசி எடுப்பதற்கு முன்பும் குமட்டல் ஏற்படுவதற்கு முன்பும், இதனை உண்ணுங்கள்.

சீரான முறையில் நடை கொடுக்கவும் மருத்துவர்கள் வேண்டாம் என கூறும் வரை, நடை கொடுப்பதும் மிதமான உடற்பயிற்சியும் கர்ப்ப காலத்தின் போது பெரிதும் உதவியாக இருக்கும். நடை கொடுப்பதால் உங்கள் உடல் முழுவதும் உள்ள புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் நீர்த்து போகும். வாந்தி ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், நடை கொடுப்பது செரிமானத்திற்கு உதவும்.

இதனால் வாந்தி எடுக்கும் வாய்ப்புகள் குறையும். கூடுதலாக, திறந்த வெளியில் நடை கொடுக்கும் போது, நற்பதமான காற்று உங்களுக்கு நல்ல மனநிலையை ஏற்படுத்தும். இரவு உணவிற்கு பிறகு தினமும் 15-20 நிமிடங்கள் வரை நடக்கவும். வெளியே செல்ல முடியவில்லை என்றால் வீட்டுக்குள்ளேயே நடக்கவும்.

கூடுதல் டிப்ஸ்…
– கூடுதல் அளவிலான உணவை தவிர்க்கவும். மாறாக சிறிய அளவில் நாள் முழுவதும் பல முறை உண்ணுங்கள்.
– வெறும் வயிற்றுடன் இருக்காதீர்கள். ஒவ்வொரு உணவு வேளைகளின் இடைவெளியில் நொறுக்குத் தீனிகளை உண்ணவும்.
– பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இது செரிக்க சிரமமாக இருப்பதால் வாந்தி ஏற்படும்.
– அதிகமான கார்போஹைட்ரேட்ஸ் அல்லது புரதம், குறைந்த கொழுப்புகள் மற்றும் சுலபமாக செரிக்க கூடிய உணவுகளை உண்ணவும்.

கூடுதல் டிப்ஸ்…
– சூடான உணவின் வாசனை குமட்டலை ஏற்படுத்தினால், குளிர்ந்த உணவுகளை உண்ணவும்.
– சீக்கிரமாக தூங்கச் சென்று, காலையில் தாமதமாக எழுந்து, அதிக நேரம் தூங்குங்கள். முக்கியமாக காலையில் படுக்கையை விட்டு மெதுவாகவும் எழுந்திருக்க வேண்டும்.
– யோகா, சுவாச பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவைகள் உங்கள் மனதின் கவனத்தை திசை திருப்பும். இது குமட்டலை குறைக்க உதவும்.
– தினமும் காலையில் குளிர்ச்சியான, பழச் சுவை கொண்ட ஐஸ் வகைகளை உண்ணவும். இது வாந்தியை அண்ட விடாது.
– இரவு உணவருந்திய பிறகு, குறைந்தது 30 நிமிடங்களுக்காவது படுக்காமல் இருக்கவும்.

Related posts

கிட்னி ஸ்டோன் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கூடவே வலியையும் அதிகமாக கொண்டிருப்பார்கள். இந்த வலி குறைக்கும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்….

nathan

இதை சாப்பிடுவதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதாம்…..

sangika

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்க இதோ சில வழிகள்!….

sangika

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

மீன் குழம்பு ஆஹா ஓஹோவென இருக்க… மீன் மசாலா பொடி… வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

nathan

குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க இத செய்யுங்கள்!…

sangika

அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி

nathan

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan