இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில், தினமும் புதுப்புது வியாதிகளால் அவஸ்தைப்படுகிறோம். மேலும் அந்த வியாதிகளுக்கு, பல மருந்துகளும் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த மருந்துகளால் பல விதமான பக்கவிளைவுகள், உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு முக்கிய பக்கவிளைவு தான் உடல் எடை அதிகரித்தல். சரி, மருந்துகள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? என்று ஆச்சரியத்துடன் கேட்கலாம்.
சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால் – ஆம், மருந்துகளால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே உடல் எடையானது அதிகமாகும். தீராத ஒற்றை தலைவலி, மன அழுத்தம் அல்லது வேறு வலிக்கு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது அந்த மருந்துகளே. ஸ்டீராய்டுகள், மன அழுத்தம், வலிப்பு, ஒற்றை தலைவலி போன்றவைகளுக்கு சாப்பிடும் மருந்துகள், உடல் எடையை கண்டிப்பாக அதிகரிக்கச் செய்யும்.
சர்க்கரை நோய்க்கு மருந்தாக இருக்கும் இன்சுலின் மற்றும் வாய் வழி சாப்பிடும் சில மாத்திரைகளும் மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆனால் எல்லா மருந்துகளும் உடல் எடை அதிகரிக்கும் காரணி என எண்ணி விடக் கூடாது. இதன் பாதிப்புகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
அலர்ஜி மாத்திரை/மருந்துகள்
அலர்ஜியை குறைக்கும் மருந்துகளில் உள்ள டைஃபென் ஹைட்ராமைன் (diphenhydramine) உடனடியாக தூக்க கலக்கத்தை ஏற்படுத்தும். இருமல் டானிக் போலவே, அலர்ஜி மாத்திரைகளும் மந்த நிலைக்கு தள்ளி விடும். ஆகவே மருத்துவரிடம் ஆலோசனை செய்து, சைர்டெக் போன்ற மற்றொரு ஆன்டி ஹிஸ்டாமைன் (anti-histamine) சாப்பிட்டால், தூக்க கலக்கம் அதிகமாக இருக்காது.
மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்
சில மனஅழுத்தத்தைக் குறைக்கும் (Anti-depressant) மருந்துகள், அதிக அளவில் பசியை தூண்டும். அதனால் ஏற்படும் எடை அதிகரிப்பை தடுக்க, ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்து, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும் மருந்துகளான சைபான் (Zyban) மற்றும் வெல்புட்ரின் (Wellbutrin) போன்ற மருந்துகளை பரிந்துரைக்கச் சொல்லவும்.
கருத்தடை மாத்திரைகள்
கருத்தடை மாத்திரைகள் எடையை அதிக அளவில் கூட்டிவிடும். அவ்வகை மாத்திரைகள் உடலில் வீக்கத்தை தேக்கி வைக்கும் தன்மையைப் பெற்றிருப்பதால், எடை அதிகரிப்பு ஏற்படும். அதனால் குறைவான ஈஸ்ட்ரோஜென் (low-estrogen) அல்லது ஃப்ரோஜெஸ்டின் (progestin) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
தூக்க மாத்திரைகள்
டைஃபென்-ஹைட்ராமைன் (diphen-hydramine), சோமிநெக்ஸ் (Sominex) அல்லது டைலினோல் (Tylenol) போன்ற தூக்க மாத்திரைகள் எடை அதிகரிப்புக்கு காரணாமாக விளங்குகிறது. இதனை பற்றி உங்கள் மருத்துவரிடம் விரிவாக கலந்து ஆலோசித்து பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒற்றைத் தலைவலி மருந்துகள்
ஒற்றைத் தலைவலி மருந்துகளில் இருக்கும் ஓலியன்சிபைன் (Oleanzipine) மற்றும் சோடியம் வால்ப்ரோட் (sodium valproat) உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் டேபகென் (depakene) மற்றும் டேபகோட் (depakote) போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
ஸ்டிராய்டுகள் (Steroids)
ஸ்டிராய்டுகள் பசியை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். உடல் எடை கூட வேண்டுமென்றால், அதிக அளவு ஸ்டிராய்டுகளை சாப்பிடலாம். இவை உடலில் தண்ணீரை தேக்கி, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மருத்துவரை குறிப்பாக எண்.எஸ்.ஏ.ஐ.டியை (NSAID) பரிந்துரைக்கச் சொல்லவும். உடலில் உள்ள கடுமையான வலி ஏற்படுவதனால், மருத்துவர் ப்ரெட்னிசோன் (prednisone) போன்ற ஸ்டீராய்டுகளைப் பரிந்துரைப்பர். இதை தேவையான அளவு சாப்பிட்டு, நன்றாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.