33.2 C
Chennai
Thursday, May 15, 2025
5120
முகப் பராமரிப்பு

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..!

நாம் சாதாரணமாக நினைக்கும் ஒவ்வொரு பொருளிலும் பல வகையான அழகியல் இரகசிங்கள் ஒளிந்துள்ளன. அவற்றையெல்லாம் நாம் கண்டு கொள்வது கூட இல்லை. இதில் இளநீரும் அடங்கும். நாம் இளநீரை தாகத்திற்காகவும், சுவைக்காகவும் அருந்துவோம்

இது நமது உடல் நலத்திற்கு அதிக ஆரோக்கியம் தரும் என்பது உண்மைதான். ஆனால், இதே இளநீர் உங்களின் கருமையான முகத்தையும் அழகாக்கிட உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். எப்படி இந்த இளநீர் நம் முகத்தை வெள்ளையாகவும், இளமையாகவும் வைத்து கொள்ளும் என்பதை இனி அறிவோம்.

சுவைமிக்க நீர்..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இளநீர் என்றால் தனி விருப்பம் இருக்கத்தான் செய்யும். இதில் அதிமான ஊட்டசத்துக்களும் தாதுக்களும் உள்ளன. இது உடலை நோயில்லாமல் காத்து கொள்ள உதவும் முக்கிய நீராகும். அத்துடன் இந்த நீர் கருமையான முகம், பருக்கள், சுருக்கங்கள் ஆகிய அனைத்திற்கும் முடிவு கட்டுகிறதாம்

முகத்தை வெண்மையாக மாற்ற வெயிலின் தாக்கத்தாலும், கண்ட வேதி பொருட்களை பயன்படுத்தியதாலும் நம் முகம் கலை இழந்து கருமையாக இருக்கும். இதை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :- முல்தானி மட்டி 1 ஸ்பூன் இளநீர் சிறிது

செய்முறை :- முல்தானி மெட்டியை இளநீரில் நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, இதனை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும். இந்த பேஸ்ட் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தை வெண்மையாக மாற்றி விடுமாம்.

முக அழுக்குகளை நீக்க முகத்தில் அழுக்குகள் சேர்ந்தால் நம் அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை உடனடியாக போக்க இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் இளநீர் 2 ஸ்பூன்

செய்முறை :- இளநீர் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை இவை முற்றிலுமாக போக்கி விடும்.

பருக்களை போக்க முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை மறைய வைக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :- இளநீர் 2 ஸ்பூன் சந்தனம் 1 ஸ்பூன் மஞ்சள் சிறிது

செய்முறை :- முதலில் சந்தனம், மஞ்சள் மற்றும் இளநீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவவும். இந்த அழகியல் குறிப்பை செய்வதால், பருக்கள் மறைந்து முகத்தின் அழகு கூடும்.

பளபளப்பான முகத்திற்கு முகம் பார்ப்பதற்கு மிகவும் மினுமினுப்பாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :- இளநீர் 2 ஸ்பூன் யோகர்ட் 2 ஸ்பூன்

செய்முறை :- யோகர்டில் இந்த இளநீரை கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி10 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இவற்றில் உள்ள வைட்டமின் பி , பி2 உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுமாம். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.5120

Related posts

இந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்… படிக்கத் தவறாதீர்கள்

nathan

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan

த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை

nathan

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan

சீரான சரும நிறத்தை பெற எலுமிச்சை சாறு மாஸ்க்

nathan

பெண்களே உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை நாங்க சொல்றம்…!

nathan

ஒரே இரவில் முகப்பருக்களைப் போக்க மாடல்கள் என்ன செய்வாங்க-ன்னு தெரிஞ்சுக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

nathan

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

nathan