23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
veg
ஆரோக்கிய உணவு

பிரிட்ஜில் எந்தெந்த உணவு பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?

வீட்டில் உள்ள பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பயன்படுத்த வேண்டும்.

இப்படி செய்வதின் மூலம் அதில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டு போகாமல் நீண்ட காலம் வரை பிரஷ்ஷாக பயன்படுத்த முடியும்.

மேலும் ஒவ்வொரு உணவுப் பொருளும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பழங்கள்
திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் வரையிலும், ஆப்பிள்கள் ஒரு மாதம் வரை, சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் வரை, அன்னாசி 1 வாரம் வரை அல்லது வெட்டிய துண்டுகள் 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.

காய்கறிகள்
புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் வரை, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வரை, வெள்ளரிக்காய் ஒரு வாரம் வரை, தக்காளி 1-2 நாட்கள் வரை, காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் வரை, காளான் 1-2 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.

அசைவ உணவுகள்
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் வரை, சமைத்த மீன் 3-4 நாட்கள் வரை, பிரஷ் மீன் 1-2 நாட்கள் வரை, ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் வரை, பிரஷ்ஷான இறால் சமைக்காதது ஒரு நாள் வரை வைக்கலாம்.

உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் வரை, பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் வரை, சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனாலும் இறைச்சி வகைகளை தினமும் பயன்படுத்துவது நல்லது.

பால் பொருட்கள்
பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் வரை, பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், 10-14 நாட்கள் வரை, மோர் 2 வாரங்கள் வரை, தயிர் 7-10 நாட்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.veg

Related posts

இட்லி சாப்பிடுங்கள்!

nathan

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

nathan

தயிரின் அற்புதங்கள்

nathan

டயட்டில் இருப்போருக்கு ஆரோக்கியத்தைத் தரும் பயறு கஞ்சி

nathan

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

nathan

ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தா

nathan

ஓமம் மோர்

nathan

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்குகிறது.

nathan

இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க..சூப்பர் டிப்ஸ்…

nathan