31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத்தடவிக் கொள்ளலாம். வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.

*** கருப்பு திட்டுகள் மறைய மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்… மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்.

*** கருவளையம் மறைய கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்… அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

*** சருமம் கருமை மாற முட்டைகோ ஸின் வெளிப்புற இலைகளை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

*** கழுத்தைப் பராமரிக்க நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்…. ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் ( Olive oil) சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய “டபுள் சின்” நாளடைவில் “சூப்பர் சின்” ஆகிவிடும்.

*** முகத்தில் புதுப்பொலிவுக்கு தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும். பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது.

*** சிவந்த இதழ்களுக்கு சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்.

*** நகங்கள் பொலிவு பெற பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும். பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும். ***

Related posts

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!

nathan

இப்படி தினமும் செய்து வாருங்கள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

nathan

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம்.

nathan

இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்…….

sangika

பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம் -தெரிந்துகொள்வோமா?

nathan

பிரபல நடிகை பளீச்! மதுவுக்கு அடிமையானேன்.. அது இல்லனா தூக்கமே வராது

nathan

கண்களுக்கு ரோஸ் வாட்டர் தரும் புத்துணர்ச்சி

nathan

நடிகை மகாலட்சுமி வைரல் போட்டோஸ்

nathan

கருமையான உதடுகளை சிவப்பாக்க சூப்பர் டிப்ஸ்…!

nathan