35.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
tenbenefitsofdrinkingwaterfromcoppervessel
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!!!

பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.

நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.

ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி ஸ்லைடுகளில் விரிவாகப் பார்க்கலாம்…

 

பாக்டீரியாக்களைக் கொல்லும்

பாக்டீரியாக்களைக் கொல்லும்

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.

 

தைராய்டு

தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

 

மூட்டு வலி

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டு வலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.

 

காயங்கள் விரைவில் குணமடைய

செப்பு உங்கள் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கிறது. இதனால், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் அது விரைவாக குணமடைய செப்பு உதவுகிறது.

 

மூளையின் செயல்திறன்

மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 

செரிமானம்

செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காணக் இயலும்.

 

இரத்த சோகை

சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.பிரசவக் காலங்களில்…

பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதை சரி செய்ய செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவது நல்ல தீர்வு அளிக்கும். மற்றும் பிரசவக் கால நோய் தொற்றுகள் அன்றாமல் பாதுகாக்கும்.

 

புற்றுநோய்

புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

 

முதிர்ச்சி

செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள இது பயனளிக்கிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா குழந்தையின் துணிகளை சரியாக துவைத்தால் இந்த பிரச்சனைகள் வராது!

nathan

மூட்டு வலியை அடித்து விரட்டும் இயற்கை பொருட்கள்…தெரிஞ்சிக்கங்க…

nathan

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

nathan

இந்த 6 ராசி பெண்கள் மோசமான மனைவிகளாக இருப்பாங்களாம்…

nathan

முதுமையும் மன ஆரோக்கியமும்

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகை எற்படுவதற்கான காரணங்கள்?

nathan

எவ்வாறு கண்டறிவது குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை?

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் பழம்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…முகக்கவசம் அணியும் போது இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

nathan