இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்ட செர்ரி பழம், உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன.
செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.
புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கிய ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.
கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும்.
புற்றுநோயாளி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.
மெலடானின் எனும் சிறந்த எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.
இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின், தடுப்புபணியை செய்கிறது.
பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.