25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tamil sidhargal
ஆரோக்கியம் குறிப்புகள்

அடிவயிற்று கொழுப்பை விரைவாக குறைக்க இதை ட்ரை பண்ணுங்க…

உணவு பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இன்று நாம் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம்.

tamil sidhargalஇதன் விளைவு உடல் பருமன் கூடி பெரிய தொப்பை அதிகரித்து விடுகின்றது. பிறகு இதனை குறைக்க பாடாய் படுகின்றோம்.

அடி வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க எளிமையான சித்தர்களின் ஆயுர்வேத முறைகளை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.

உணவும் தொப்பையும்…

உண்ணும் உணவில் அதிக அளவில் கொழுப்புகள் இருந்தால் அது நம் உடலில் சேர்ந்து கொள்ளும். சிறிது சிறிதாக சேர தொடங்கி பின்னாளில், வயிறு உப்பி “தொப்பை” என்ற ஒன்றை பெற்று தரும்.

இது ஆண்கள் பெண்கள் என தனி தனி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருவருக்கும் பொதுவான பாதிப்பையே தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சித்தர்களின் முறை…

பண்டைய காலத்தில் மக்கள் நோய் நொடியின்றி இருந்ததற்கு சில முக்கிய காரணிகள் இருக்கிறது. சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, சித்த வைத்திய முறைகள், ஆசனங்கள் போன்றவை அவர்களுக்கு பெரிதும் உதவியது. இது சித்தர்களால் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வந்ததாம்.

எலுமிச்சை

ஆரோக்கியமான உடல் நிலையை தருவதில் எலுமிச்சைக்கு பெரிய பங்கு உள்ளது. தினமும் காலையில் உங்கள் நன்னாளை இந்த எலுமிச்சை சாறுடன் தொடங்குங்கள்.

மிதமான சுடு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைந்து விடும்.

வெந்தயம்

உடல் கச்சிதமாக வைத்து கொள்ள இந்த வெந்தயம் சிறந்த முறையில் உதவுகிறது. Galactomannan என்ற முக்கிய கொழுப்பை கரைக்க கூடிய மூல பொருள் இதில் உள்ளது.

தினமும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் உடனடியாக கரைந்து நல்ல பலனை தரும்.

விஜயசார்

இது மிகுந்த மூலிகை தன்மை வாய்ந்த ஒரு அற்புத மரமாகும். இதன் பட்டை சர்க்கரை நோயிற்கு பெரிது பயன்படுவதாக ஆயுர்வேத மருத்தவர்கள் கூறுகின்றனர். அத்துடன் உடல் எடையை குறைக்கவும் இது உதவுமாம். குறிப்பாக அடி வயிற்று கொழுப்பை இது விரைவிலே குறைக்குமாம்.

இஞ்சி

நம் வீட்டிலே உள்ள பொருட்களில் முதன்மையான மூலிகையாக இந்த இஞ்சி கருதப்படுகிறது. இதில் உள்ள Gingerols என்ற மூல பொருள் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி விடும். எனவே, தினமும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது டீ போன்று குடித்து வாருங்கள்.

பூண்டு

வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க பூண்டு பெரிதும் பயன்படுகிறது. தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவிலே குறையும். மேலும், ரத்த ஓட்டம் சீரடைந்து உடல் ஆரோக்கியம் நலம் பெறும்.

Related posts

பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது!…

sangika

உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசியின் செக்ஸியான விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா?

nathan

மூட்டை பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது!…

sangika

மூலிகை ரகசியம் – 20.. ஆரோக்கியம் தரும் ஆலமரம்… பற்களின் வலிமைக்கு உரம்…

nathan

கர்ப்பமாக இருக்கும்போது கத்திரிக்காய் சாப்பிடவே கூடாது… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…விளக்கெண்ணெயின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

கோடை காலத்தின் போது பெண்ணுhealth tip tamil

nathan

தெரிஞ்சிக்கங்க…இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

nathan