29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
carrot juice
ஆரோக்கிய உணவு

காரட் ஜூஸ் இவ்வளவு நன்மைகளா?

உணவில் சேர்த்து உண்ணத்தக்க வகையில் பல காய்கள் உள்ளன. அதில் பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகை காய்களும் அடங்கும். அப்படி பல சத்துக்களை கொண்ட, உடலுக்கு நன்மை புரிகிற ஒரு காய் வகைதான் கேரட். இந்த கேரட்டை பச்சையாகவும், பக்குவப்படுத்தி சமைத்தும் உண்ணலாம், சான்றாகவும் அருந்தலாம். கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காண்போம்.

carrot juice 2

கேரட் ஜூஸ் பயன்கள்

எலும்பு உறுதி

வயது ஆகும் போது மனிதர்கள் அனைவரின் எலும்புகளும் உறுதித்தன்மையை இழக்கும். தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

காயங்கள்

நமது உடலின் வெளிப்பகுதியில் பல்வேறு காரணங்களால் காயங்கள் ஏற்படுகின்றன. இது தானாக ஆறும் என்றாலும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு வெகு விரைவில் காயங்கள் ஆறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

carrot juice 3

கொழுப்பு

நாம் உண்ணும் உணவில் அதிகளவு கொலஸ்ட்ரால் சேருவது உடலநலத்திற்கு தீங்கானது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்தம் உறைதல்

ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.

carrot juice 1

புற்று நோய்

தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.

கண்பார்வை

கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

carrot juice

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வளர்சிதை

மாற்றம் கேரட்டில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்கள் உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்திறனை சமநிலைப்படுத்தி, உடலின் சீரான இயக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவுகிறது.

carrot juice 5

தொற்று நோய்கள்

தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

கல்லீரல்

நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது நமது கல்லீரலின் நலத்திற்கும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கும் சிறந்தது.

carrot juice 4

பற்கள்

நமது வாய்க்குள் இருக்கும் பற்கள் உணவை நன்கு மென்று திண்பதற்கு உதவுகிறது. பற்கள் சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம், மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ஏற்படுவதில்லை.

குழந்தைகள்

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கேரட் சாற்றை தினந்தோறும் அருந்த கொடுப்பதால் அவர்களின் வளர்ச்சி மேம்படுகிறது. அடிக்கடி நோய்தாக்குதலுக்கு உட்படுவதும் குறைகிறது.

 

Related posts

சூப்பரான வெண் பொங்கல்

nathan

காலை உணவில் இஞ்சியை சேர்க்கலாமா? தெரிஞ்சிக்கோங்க!

nathan

சுவையான கேரட் பச்சை பட்டாணி சாலட்

nathan

கழிவுகளை 5 நிமிடத்தில் அடித்து விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகள் இயற்கையாகவே உங்க சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமாம்…!

nathan

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

nathan

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. சுண்டைக்காயின் குணநலன்கள்!

nathan

பலரும் அறிந்திராத பூண்டு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

nathan