29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover pic blackheads 1536059190
முகப் பராமரிப்பு

உங்க மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை மாயமாய் மறைய சூப்பர் டிப்ஸ்….

நம் அனைவருக்கும் எப்போதும் சிறப்பாகவும், அழகாகவும் காட்சியளிக்க வேண்டுமென்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக பல்வேறு சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. அதில் ஒன்று கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகளைப் போக்குவதற்கு எவ்வளவு தான் கடைகளில் ஒப்பனைப் பொருட்கள் விற்கப்பட்டாலும், அனைத்துமே பலன் அளிக்கும் என்று கூற முடியாது.

ஆனால் கரும்புள்ளிகளைப் போக்குவதற்கு என்று பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. இந்த இயற்கை வழிகள் அனைத்துமே மிகவும் எளிமையானது மற்றும் அனைவருமே பின்பற்றும் வகையில் விலைக் குறைவான பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்கக்கூடியது. ஒருவருக்கு கரும்புள்ளிகள் வருவதற்கு அதிகப்படியான எண்ணெய் பசை மட்டுமின்றி, இறந்த செல்களின் தேக்கத்தினாலும் தான்.

சரி, இப்போது முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் என்னவென்று காண்போம்.

முட்டை வெள்ளைக்கரு மாஸ்க் இது மிகவும் எளிமையான மற்றும் விலைக் குறைவான ஃபேஸ் மாஸ்க். இந்த மாஸ்க் செய்வதற்கு ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முகத்தை நீரால் சுத்தமாக கழுவி, துடைக்கவும். பின் அடித்து வைத்துள்ள வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, முகத்தின் மேல் டிஸ்யூ பேப்பரை வைத்து காய வைக்க வேண்டும். டிஸ்யூ பேப்பர் நன்கு காய்ந்த பின், சருமமானது இறுக்கமடைந்திருப்பது போன்ற உணர்வைப் பெறுவீர்கள். இந்நிலையில் டிஸ்யூ பேப்பரை நீக்கி விட்டு, முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் பட்டை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அதன் மேல் ஒரு சுத்தமான காட்டனை வைத்து, 5 நிமிடம் கழித்து காட்டனை நீக்கி, முகத்தை நீரால் கழுவிடுங்கள்.

நீர் சிகிச்சை கரும்புள்ளிகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் இரண்டு முறையாவது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். அதன் பின் முகத்தை சுத்தமான துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். இதனால் சருமம் சுத்தமாக இருப்பதோடு, சருமத் துளைகளும் சுத்தமாக இருக்கும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை குளிர்ந்த நீர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி, லேசாக மசாஜ் செய்து, சில நிமிடங்கள் கழித்து, முகத்தைக் கழுவுங்கள். அதன் பின் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

டோனர் நீங்கள் தினமும் டோனர் பயன்படுத்துபவராக இருந்தால், தினமும் சில முறை டோனரைப் பயன்படுத்தி வாருங்கள். இதனால் சருமத் துளைகள் சுத்தமாக இருப்பதோடு, விரிவடைந்த சருமத் துளைகளும் சுருங்கும்.

ஆவிப் பிடிப்பது ஆவி பிடிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் ஆவி பிடிக்கும் போது சரும துளைகள் விரிவடைந்து, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

எலுமிச்சை முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகளை இன்னும் எளிமையான வழியில் நீக்க நினைத்தால், வீட்டில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு போக்கலாம். அதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 2-3 நிமிடங்கள் கழித்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள். இறுதியில் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.

ஓட்ஸ் மற்றும் தயிர் இது மிகவும் அற்புதமான ஸ்கரப். இந்த ஸ்கரப்பை ஒருவர் அவ்வப்போது போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றைத் தடுக்கலாம். இந்த ஸ்கரப் செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, விரலால் சில நிமிடங்கள் தேய்த்து விடுங்கள். பின் முகத்தை நீரால் கழுவி, துணியால் துடைத்திடுங்கள். இதனால் கரும்புள்ளிகள் எளிதில் வெளிவந்துவிடும்.

க்ரீன் டீ க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இந்த க்ரீன் டீயை தினமும் காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இறுதியில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சரும அழகும் மேம்படும்.

டூத் பேஸ்ட் தினமும் பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் கரும்புள்ளிகளை நீக்க உதவும். அதற்கு டூத் பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பேஸ்ட் நன்கு காய்ந்த பின் தேய்த்துக் கழுவுங்கள். சொல்லப்போனால் இந்த முறையை இரவு நேரத்தில் மேற்கொள்வது மிகவும் நல்லது. டூத் பேஸ்ட் முறை இன்னும் சிறப்பான பலனைக் கொடுக்க வேண்டுமானால், டூத் பேஸ்ட் உடன் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடரை சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்திடுங்கள்.

cover pic blackheads 1536059190

Related posts

முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

மிகவும் ஈஸியாக கருவளையங்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்!!!

nathan

உங்க முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு க்ரீம் போட்டா போதும்!! எந்த மேக்கப்பும் போட தேவையில்ல!!

nathan

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படியுங்க…

nathan

சுப்ரர் டிப்ஸ்! சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க செய்யும் “ஆப்பிள்”

nathan

வீட்டில் இருந்தபடியே முகம் பொலிவு பெற வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்…

nathan

முகப்பரு தொலையினால் அவஸ்தைப்படுகிறீர்காளா? இனி தொல்லையே இல்லை!

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் உள்ள கருமை, தழும்பு மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்

nathan

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan