28.6 C
Chennai
Monday, May 20, 2024
30 1509367904 8
முகப் பராமரிப்பு

உங்க அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி? இதை முயன்று பாருங்கள்!

கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. முகப்பருக்களை கிள்ளுவதால் இந்த கரும்புள்ளிகள் வருகின்றன. க்ரீம்கள் இதனை போக்க உதவினாலும், ஒரு சிலருக்கு க்ரீம்கள் சரியாக வராது. ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி அதிகளவு க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இந்த பகுதியில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது என்பது பற்றி காணலாம்.

1. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

2. வெந்தய கீரை
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

3. தயிருடன் எலுமிச்சை
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

4. சர்க்கரை மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

5. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கய வைத்து பின்பு கழுவ வேண்டும். இதில் உள்ள பிளிச்சீங் தன்மை முகத்தில் உள்ள கருமைகளை மறைக்கிறது

6. எலுமிச்சை தேன்
வெயிலில் சுற்றி திரிவதனால் உங்கள் முகம் கருப்பாகி விட்டதா அதை வெள்ளையாக்க எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் மிருதுவாகும்.

7. பால், சந்தனம்
பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வாரத்தில் மூன்று முறை செய்தால் போதுமானது.

8. முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் தழும்புகள் மறையும்.

9. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் சிறிது லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைய தோன்றும்.30 1509367904 8

 

Related posts

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

முகம் பொலிவுடன் மிளிர……..

sangika

பெண்களின் கன்னங்கள் பளிச்சிட அழகு குறிப்புகள்

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

முகத்தில் வளரும் முடியை அகற்ற இந்த பொருளை தினமும் உபயோகிங்க!!

nathan

வீட்டில் இருந்தபடியே அழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்

nathan

முகப் பொலிவிற்கு!

nathan

மருக்கள் உங்கள் அழகை அலங்கோலம் ஆக்குகிறதா? அப்ப இத படியுங்க…

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan