நம்மில் பெரும்பாலானோருக்கு பல்வேறு வகையான டீ குடிக்கும் பழக்கமும் பல்வேறு பின்பற்றும் முறைகளும் இருக்கும். அதில் பல ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் உண்டு.
அதேபோல் அளவில் நாம் எல்லோருமே ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருப்போம். அதாவது, டீ கப், மக், உயரமான டம்ளர் என அவரவர் டீயை எவ்வளவு விரும்புகிறோமோ அதற்கு ஏற்றபடி குடிப்பதுண்டு.
டீ வகைகள் குடிக்கும் அளவு மற்றும் முறைகளைப் பொருத்துதான் நன்மைகளும் பக்க விளைவுகளும் கூட உண்டாகும். அதில் சில வகை டீ உடலுக்கு பெரும் ஆரோக்கியம் கொடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக, கிரீன் டீ, லெமன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி, உடல் கொழுப்பைக் கரைப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது என பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அதுபோல் சமீபத்தில் மிகவும் நன்மை தருகின்ற ரெட் டீ என்று ஒன்று பிரபலமாகி வருகிறது. அது செயற்கையான டீ எதுவுமில்லை. இயற்கையான ஒருவகை டீ பொடி தான் இது.
ரெட் டீ (சிகப்பு டீ) ரெட்ரூய்பஸ் என்னும் ஒரு வகை தேயிலையில் இருந்து தயாரிப்பது தான் இந்த ரெட் டீ (சிகப்பு டீ). இந்த டீ கொஞ்சம் இயல்பாகவே இனிப்புச் சுவை
நன்மைகள் காஃபினைன் இல்லாதது இந்த ரெட்ரூய்பஸ் தேயிலை இயற்கையாகவே வளரக் கூடியது. இதற்கென் எந்தவித உரங்களோ கெமிக்கல் கலந்த உரங்களோ பயன்படுத்தப் படுவதில்லை. இதை எல்லோருமே தாராளமாகக் குடிக்கலாம். ஏன் டீ, காபி பிடிக்காதவர்கள், பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த டீயை குடிக்கலாம். ஏன் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் கூட குடிக்கலாம்.
ஆன்டி ஆக்சிடண்ட் இதில் மிக அதிக அளவில் ஆன்டி – ஆக்சிடண்ட் நிறைந்திருக்கிறது. இது பல்வுறு வகைகளில் நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது. நம்முடைய உடலுக்கு மிக அவசியமான ஆஸ்பிலத்தீன் மற்றும் நாதோஃபாகின் ஆகிய இரண்டு மிக முக்கிய ஆன்டி ஆக்சிடண்ட்டையும் இந்த சிகப்பு டீயில்மிக அதிகமாகக் கண்டுபிடிக்க முடியும். இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸைப் பாதுகாக்கிறது.
புற்றுநோய் சில ஆய்வுகளின் முடிவில், இந்த ரெட்ரூய்பஸ் தேயிலையான சிகப்பு டீ சில புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இந்த டீ விளங்குகிறது.
அதிக மினரல்கள் இந்த ரெட்ரூய்பஸ் என்னும் சிகப்பு டீயில் அதிக அளவில் மினரல்கள் இருக்கின்றன. இதிலுள்ள மக்னீசியம் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. கால்சியமும் மாங்கனீசும் பற்களையும் எலுமு்புகளையும் பாதுகாக்கிறது. இந்த டீயில் உள்ள ஜிங்க் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதிலுள்ள அயர்ன் ரத்தம் மற்றும் தசைகளை வலுவாக்கி, ரத்தத்தில் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.
ரத்த ஓட்டம் ரெட்ரூய்பஸ் தேயிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவிடுகிறது. இதிலுள்ள என்சைம்கள் இதயம் சார்ந்த நோய்களிலிருந்து காக்கிறது. இந்த டீயை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகிறது.
வயிற்றுப் பிரச்னை இந்த டீ வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். டயேரியாவை சரிசெய்யும் ஆற்றல் இந்த ரெட்ரூய்பஸ் தேயிலைக்கு உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட அலர்ஜியை சரி செய்யும்.
அல்சைமர் இந்த ரெட்ரூய்பஸ் தேயிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் மினரல்கள் மறதி நோய் என்று சொல்லப்படுகின்ற அல்சைமர் நோயை குணப்படுத்துகிறது.
நிம்மதியான தூக்கம் ரெட்ரூய்பஸ் தேயிலை என்னும் ரெட் டீ (சிகப்பு டீ) நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கிறது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதால் இயல்பாகவே நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும்.