25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5719302
ஆரோக்கிய உணவு

குப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் அற்புத நன்மைகள் எவ்வளவு தெரியுமா…?இத படிங்க!

குப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் அற்புத நன்மைகள் எவ்வளவு தெரியுமா…?இத படிங்க!நம் ஊரில் எது அதிகமாக இருக்கிறதோ இல்லையோ இந்த குப்பைக்கு பஞ்சமே இல்லை. இப்போதுகூட நம்ம பக்கத்திலே எதோ ஒரு குப்பை இருக்கத்தான் செய்யும். குப்பை இருப்பதில் எந்த

பிரச்சினையும் இல்லை. ஆனால், அவற்றை நல்ல முறையில் நாம் மறு சுழற்சி செய்கிறோமா என்பதுதான் கேள்வியே..! எந்த ஒரு குப்பையாக இருந்தாலும் அவற்றை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து அவற்றை பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்த காய்கறி குப்பைகள் சற்றே வித்தியாசமானது.

அதாவது, நாம் பொதுவாக காய்கறிகளின் தோலை அப்படியே போட்டு விடுவோம். ஆனால் இவற்றில் சில அற்புதமான தந்திரங்களை நாம் செய்யலாம். இந்த பதிவில் காய்கறி தோள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காய்கறி தோல்…

பொதுவாக இதனை குப்பையாகத்தான் நாம் கருதுகின்றோம். ஆனால், இவற்றில் எண்ணற்ற நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது. எல்லா வகையான காய்கறி தோளிலும் அதிக படியான அழகு இரகசியங்கள் உள்ளன. உருளை கிழங்கு முதல் எலுமிச்சை தோல் வரை அனைத்திலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றது. பொதுவாக தோலில்தான் நிறைய சத்துக்கள் இருப்பதாக ஆராய்ச்சிகளும் சொல்கின்றது.

வெள்ளரிக்காய் தோல் :-

வெள்ளரிக்காயை தோல் நீக்கிய பிறகு, அந்த தோலை கண்ணின் ஆரோக்கியத்திற்கு பயன்படுமாம். கரு வளையங்கள், கண் வீக்கம் போன்றவற்றிற்கும் நல்ல பலனை இது தரும். இவற்றில் உள்ள விட்டமின்கள் கண்ணின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

எலுமிச்சை தோல் :-

எலுமிச்சை தோலை நாம் குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சரும பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு இதற்கு உண்டு. வறண்ட அல்லது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவருக்கு இதன் தோல் நன்கு உதவும். அத்துடன் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் இன்றியும் மாறும்.

பாகற்காய் தோல் :-

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் எவ்வளவு பயன்படும் என்பது நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். பாகற்காய் தோலில் ஒரு அற்புத மகத்துவம் உள்ளது. இதனை புண் தழும்புகள் மீது தடவினால் விரைவில் குணமாகும். அத்துடன் அவற்றில் உள்ள கிருமிகளையும் அழிக்கும்.

உருளை கிழங்கு :-

பலருக்கு உருளை கிழங்கு சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஆனால், நாம் இதன் தோலை பெரிதும் நீக்கி விடுவோம். இந்த தோலை கொண்டு உங்கள் முக அழகை எளிதாக பெறலாம். இதன் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை முகத்தில் ஒட்டினால் முகம் பொலிவு பெறும்.

பீட்ரூட் தோல் :-

ரத்தத்திற்கு நல்ல நண்பனாக இருக்க கூடிய இந்த பீட்ரூட் பல பயன்களை நமக்கு தருகின்றது. பீட்ரூட்டின் தோலை சீவிய பிறகு அதனை தாடை மற்றும் உதடுகளில் தடவினால், மிகவும் அழகாக மாறும். அத்துடன் பார்ப்பதற்கு மென்மையாகவும் இருக்கும்.

தக்காளி தோல் :-

மிகவும் மென்மையான பழமான தக்காளியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை அப்படியே உண்டால் அது உடலுக்கு நன்மை தரும். இந்த தக்காளியின் தோலில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இதனை முகத்தில் தடவினால் முகம் இளமையாக இருக்கும். அத்துடன், முகம் மின்னவும் செய்யும்.

கருணை கிழங்கு :-

மிகவும் மங்கலான தோல் இருக்கின்றது என்று வருந்துகிறீர்களா..? இனி அந்த கவலையே வேண்டாம். இந்த கருணை கிழங்கின் தோலை முகத்தில் தடவி மசாஜ் செய்தாலே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் வெண்மையாக பொலிவு தரும்.

கேரட் தோல் :-

கண்ணிற்கு கேரட் எத்தகைய நன்மையை தருகின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், பொதுவாக இதனை தோல் சீவியே பயன்படுத்துவோம். குப்பையில் போடும் இந்த தோலை எடுத்து அரைத்து முகத்தோலில் பூசினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். மேலும், முகம் வெண்மையாக தோற்றம் அளிக்கும்.

முள்ளங்கி தோல் :-

முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பவருக்கு இந்த முள்ளங்கி தோல் நன்கு உதவும். இதில் உள்ள வைட்டமின் பி6 சருமத்தை மிருதுவாக்கும். இந்த தோலை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால் சருமம் பட்டுபோல மாறும். அத்துடன் தோலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு :-

பொதுவாக சர்க்கரை வள்ளி சிப்ஸ் என்றால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணுவார்கள். ஏனெனில் இதன் சுவை அவ்வளவு அதிகமானது. அதே அளவிற்கு இதன் தோலிலும் நல்ல சத்துக்கள் உள்ளன. இந்த தோலை கரு வளையத்தில் தடவினால் விரைவிலேயே இது மறையும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.5719302

Related posts

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் ஆலு சப்பாத்தி

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் நிகழும் அதிசயம்

nathan

ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’

nathan

பாத்தா ஷாக் ஆவீங்க சத்தானது என நீங்கள் நினைக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்!

nathan

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு

nathan

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம் -தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

மாங்காய் கருப்பட்டி ஜூஸ்

nathan