29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
FC1F09D3E0BC INLVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

மன அழுத்தம் எல்லோருக்கும் வரக்கூடியதே. என்ன பிரச்னை என்றே தெரியாமல் எல்லாவற்றுக்கும் கேபப்படுவோம், டென்ஷனாவோம்.

வாழ்கையில் சில நேரங்களில் நம்மை அறியாது ஒரு சில விஷயங்கள் மன குழப்பதை ஏற்படுத்தும். கவலையை ஏற்படுத்தும்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

பெரும்பாலானவர்கள் இதற்கு சொல்லும் மருந்து உங்கள் மனதை திசை திருப்புங்கள். சமையல் செய்யுங்கள், தோட்டக்கலையில் ஈடுபடுங்கள், தியானம் செய்யுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புத்தகம் வாசியுங்கள் என ஆளுக்கொரு ஐடியா கொடுப்பார்கள்.

அது எப்படி மன அழுத்தத்தில் இருக்கும் போது மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு புத்தகத்தை படிக்க முடியும்? என கேட்டத் தோன்றும்.

இது எல்லாமே அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது தான்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. எம்டி மைட் இஸ் டெவில்ஸ் ஒர்க்ஷாப் என்று. எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் மனம் மிகவும் மோசமான சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.

அதனால், உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையச் செய்யுங்கள். அதிகாலை எழுந்து தியானம் செய்தால் மனதிற்கு அமைதியாக இருக்கும் என்று கருதினால் அதை செய்யுங்கள்.

இல்லை நான் அதிகாலை எழுந்து ஜாக்கிங் போனாலே போதும், அந்த சுத்தமான காற்றிற்கும், சூரிய வெளிச்சத்திற்கும் எல்லா பிரச்னைகளும் பறந்து ஓடிவிடும் என்று தோன்றினால் அதை செய்யுங்கள்.

ஸ்டிரெஸ் பஸ்டர்ஸ்!

ஸ்டிரெஸில் இருந்து விடுபட நமக்கு உதவுபவை ஸ்டிரெஸ் பஸ்டர்ஸ். உங்களது மன அழுத்தத்தை குறைக்க ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடியுங்கள்.

இசை: உங்கள் செல்போனில் ஒரு அழகான இளையராஜா பாடலைப் போட்டு கேட்பதைவிட ஸ்டிரெஸ்ஸை சரிசெய்ய சிறந்த வழி இருக்க முடியாது. இல்ல சார் நான் யுவன் பாட்டு தான் கேட்பேன் என்றாலும் சரிதான். இசை ஒரு நல்ல மருந்து.

சிரிப்பு: வாய்விட்டு சரித்தால் நோய் விட்டுப் போகும். மன அழுத்தமும் ஒரு நோய் தான். நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக பேசி சிரியுங்கள். குடும்பதினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

உடற்பயிற்சி: இந்த விஷயத்தில் உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். ‘உடம்பை வளர்தேன் உயிர் வளர்தேனே’ என திருமூலர் கூறியதைப் போல, ஆரோக்கியமான உடலை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது.

விளையாட்டு: வெளியே கிளம்பிச் சென்று வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனைகள் காணாமல் போகும்.

யோகா: யோகா, தியானம் மன அமைதியை ஏற்படுத்தும். மூச்சுப் பயிற்சியும் உற்சாகத்தை கொடுக்கும்.

குழந்தைகள்: குழந்தைகளுடன் பேசி விளையாடினால் உலகையே மறக்கலாம்.

சமையல்: நன்றாக சமைத்து, அதை ரசித்து ருசித்து சாப்பிட்டாலே போதும் பத்தும் பறந்து போகும்.

உங்கள் செல்போனை ஸ்விச் ஆப் செய்தாலே பாதி பிரச்னைகளுக்கு விடை கிடைத்துவிடும். பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களை விட்டு வெளியே வாருங்கள. உங்கள் செல்போனை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு இயற்கையை ரசித்து மகிழுங்கள்.

தவறான வழியை தேடாதீர்கள்!

சில நேரங்களில் என்னவென்றே தெரியாத அழுத்தங்கள் நம்மை போட்டு தாக்கும். அதிலிருந்து விடுபட புகைபிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டாம். அது தற்காலிகமாக நிவாரணம் வழங்குவதைப் போல் தோன்றினாலும் பின்னர் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்.

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். நல்ல உணவு, நல்ல ஓய்வு எல்ல பிரச்னைகளையும் குணப்படுத்தும்.

ரொம்பவும் டென்ஷனாக இருந்தால் வயிறு நிறைய சாப்பிட்டு, படுத்து தூங்குங்கள். வாழ்கையை எப்போதும் பாஸிட்டிவான எண்ணங்களுடனே அனுகுங்கள்.

இதெல்லாம் சரிபட்டுவராது என்பவர்கள் ஒரு நல்ல மன நல மருத்துவரை சந்திப்பது சிறந்தது.FC1F09D3E0BC INLVPF

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்

nathan

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

nathan

எவ்வாறு நோய்களில் இருந்து காத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்!…

sangika

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலில் பொறுமை என்பதே கிடையாதாம்…

nathan

அகமும் சார்ந்ததே அழகு!

nathan

உங்களுக்கு தெரியுமா ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

nathan

பெண்களே நீங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தினமும் இதை செய்யுங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு இன்னும் சரியா பிரா துவைக்கவே தெரியலையா?…

nathan

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

nathan