30.1 C
Chennai
Sunday, Jun 30, 2024
8 1535605828
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பெண்கள் எடை குறைவாக இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

பெண்கள் அனைவருமே விரும்புவது ஒல்லியான உடலமைப்பைதான். ஆனால் மாறாக தற்போது பெண்கள் பலருக்கும் எடை அதிகரிப்பு என்னும் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் சில பெண்களுக்கு எப்பொழுதுமே எடை

அதிகரிப்பதில்லை. பெண்கள் ஒல்லியாக இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கலாம் ஆனால் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை அவர்கள் உணருவதில்லை.

பெண்கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ப சரியான எடையில் இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பல ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பெண்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என பல காரணங்கள் உள்ளது. இங்கே குறைவான எடை உள்ள பெண்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய கேடுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

யாரெல்லாம் எடை குறைவாய் உள்ளவர்கள்?

பிஎம்ஐ 18.5 க்கு குறைவாக உள்ள பெண்கள் குறைவான எடையுள்ள பெண்களாக கருதப்படுகிறார்கள். பெண்களின் சராசரி உயரமான 5 அடி 4 அங்குலத்திற்கு பெண்கள் 48.5 கிலோ இருக்க வேண்டும். இதற்கு குறைவாக உள்ள பெண்களின் பிஎம்ஐ 18.4 ஆகும். பெண்களின் ஆரோக்கியமான எடை என்பது 49 கிலோவிலிருந்து 65 கிலோ வரை ஆகும்.

எடை குறைவு ஏற்பட காரணங்கள்

சில பெண்களின் உடலமைப்பே ஒல்லியானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு அவர்களின் ஆரோக்கிய பிரச்சினையால் உடல் இழப்பு ஏற்படலாம். தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு உடல் எடை வேகமாக குறையும். ஹெப்பாடிட்டிஸ், COPD போன்ற நோய்களும் எடை இழப்பை ஏற்படுத்தும். உணவு குறைபாடுகள், அதிக உடற்பயிற்சி, சிலசமயம் மரபணுக்கள் கூட இந்த எடை இழப்பை ஏற்படுத்தும்.

எடை குறைவால் ஏற்படும் பிரச்சினைகள்

பெண்களின் ஆரோக்கியத்திற்கான அறிகுறியே சீரான மாதவிடாய்தான். எடை மிகக்குறைவாக இருப்பது சீரற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் முழுவதும் நின்றுவிட கூடிய ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் உடலில் கொழுப்புகள் குறைந்து விட்டால் உங்கள் மாதவிடாய் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக நீங்கள் சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அதிக உடற்பயிற்சி செய்தாலோ இந்த பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.

கர்ப்பமாகுதல்

மாதவிடாயில் பிரச்சினை ஏற்படுவது பெண்களுக்கு கர்ப்பமாவதில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக மாதவிடாய் முழுமையாக நின்ற பெண்களுக்கு இது அதிக பிரச்சினையை ஏற்படுத்தும். உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாவிட்டால் உங்களுக்கு கருமுட்டை வெளிப்படவில்லை என்று அர்த்தம்.

ஆஸ்டியோபோரோசிஸ்

எடை இழப்பு உங்கள் வாழ்க்கையின் பின்னர் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால் பெண்களின் எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் உடையக்கூடியதாக மாறிவிடுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

போதுமான அளவு ஊட்டச்சத்துக்களும், நீர்சத்துக்களும் கிடைக்காத போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாகுதல், அனிமியா போன்ற மோசமான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடலில் போதுமான அளவு இரும்பு சத்துக்கள் இல்லாதபோது அனிமியா உண்டாகிறது. இதனால் சோர்வு, மயக்கம் பலவீனம் போன்ற குறைபாடுகள் ஏற்படும்.

இறப்பு

எடை குறைவாய் உள்ள பெண்களின் ஆயுட்காலம் எடை அதிகமான பெண்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமின்றி இது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடற்பயிற்சி

உணவு குறைபாட்டால் எடை குறைவாக உள்ள பெண்கள் உடற்பயிற்சசி செய்யாமல் இருப்பதே நல்லது. அவர்கள் விரும்பினால் மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு உடற்பயிற்சி செய்யலாம். ஏனெனில் உங்களுடைய தசைகளின் வலுவிற்கும், சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உடற்பயிற்சிகள் அவசியமானது. உடற்பயிற்சி செய்வதாய் இருந்தாலும் கடுமையான உடற்பயிற்சிகள் இல்லாமல் மிதமான உடற்பயிற்சிகளை செய்யவும்.8 1535605828

Related posts

தமன்னா வோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம்! என்னன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! இரண்டே வாரத்தில் எடையைக் குறைக்க உதவும் சிறந்த ஒர்க்-அவுட்கள்!!!

nathan

வெந்நீரில் உப்பு கலந்து கண்களை கழுவுங்கள்!

nathan

பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?

sangika

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

nathan

ஆண்கள் ஏன் குள்ளமான பெண்களை அதிகம் விரும்புகிறார்கள்…

nathan

சளி பிரச்னையில் இருந்து மீள்வதற்கு ஈஸியான எட்டு டிப்ஸ்கள் இங்கே…

nathan

உங்கள் தொடை பெருத்து அசிங்கமா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்?

nathan