0458
ஆரோக்கிய உணவு

ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
மிளகு – 20
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு தயார்.0458

Related posts

நீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு…

nathan

கண்டிப்பா தெரிஞ்சுகோங்க! செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

nathan

சூப்பர் டிப்ஸ்! எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால்..!!

nathan

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில் மிளகு நீர் பருகினால் இவ்வளவு நன்மைகளா?

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை

nathan