பித்தக் கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன?
* உடல் பருமன் உள்ளவர்களுக்கு
* கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு
* செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்
* இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு
* பரம்பரை காரணமாக
* சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக
* விரதம் இருப்பதால்
வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து கற்களாக உறைந்துவிடும் அபாயமிருக்கிறது. தீவிர டயட் செய்யும் இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான்!
பித்தக் கற்களின் அறிகுறி என்ன?
விதவிதமான வலிகள் ஏற்படும். மாரடைப்பு வலியோ என்று கூட பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும் முதுகிலும் தோள் பட்டையிலும் கடுப்பெடுக்கும் வாந்தியும் குமட்டலும் அவஸ்தை தரும். ஒரு சிலருக்கு சிறிது கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தீர்வு தான் என்ன?
பித்தப்பை கற்களைக் கரைப்பதற்கென்றே மருந்துகள் உள்ளன. இவை, பித்தநீர் பைக்குள் அதிர்வலைகளைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றி விடும். இம்முறை கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் ஏற்றதல்ல!
லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் பித்தக் கற்களை, வலியின்றி மிகச் சுலபமாக நீக்கிவிடலாம். சில சமயம், குடல் ஒட்டுதல், அதிகம் இருந்தாலோ, பொது பித்த நாளத்தில் கட்டிகள் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம். பித்தப் பையைக் கற்களுடன் நீக்காவிட்டால், மஞ்சள்காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பித்தக் கற்கள் வராமலிருக்க என்ன செய்யணும்?
ரொம்ப ஸிம்பிள்! கொழுப்புக் கூடுதலாக உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். பட்டினி, விரதம் என வயிற்றைக் காயப் போடாமல், வேளா வேளைக்கு மிதமான நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலே கற்களுக்கு கல்தா கொடுக்கலாம்!