1 rice cutlet. L jpg
ஆரோக்கிய உணவு

வெஜிடபிள் ரைஸ் கட்லெட்

சாதம், காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டையும் சேர்த்து கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட்
தேவையான பொருட்கள் :

நன்கு வேகவைத்த சாதம் – ஒன்றரை கப்
உருளைக்கிழங்கு – ஒன்று
குடைமிளகாய் (நறுக்கியது) – 2 டீஸ்பூன்
வேகவைத்து, மசித்த கேரட், பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெங்காயம் – 1
எண்ணெய் – 4 டீஸ்பூன்
பிரெட் தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும் (அரைக்க வேண்டாம்; கையால் மசித்தால் போதும்).

கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, அதில் வேகவைத்த சாதம், மசித்த உருளைக்கிழங்கு, காய்கறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கையால் நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்யவும்.

லேசாக பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

சூப்பரான சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட் ரெடி.

ஒரு கைப்பிடி சாதம்கூட சாப்பிடாத குழந்தைகளை ஒரு கப் சாதம் சாப்பிட வைக்க இது எளிய முறை. சாதம், காய்கறிகள் எல்லாம் இதனுள்ளேயே இருப்பதால் தேவையான சத்தும் கிடைக்கும்.1 rice cutlet. L jpg

Related posts

பாகற்காய் சாப்பிட கசக்கிறதா ?… இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

சூப்பரான மாங்காய் சிக்கன் குழம்பு

nathan

தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால்

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து…!!

nathan

வீட்டு/சமையல் குறிப்புகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! ரத்ததில் கலக்கும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர..

nathan

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan