28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
andoori recipes problems. L
ஆரோக்கிய உணவு

எச்சரிக்கை! தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்

தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்
எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.

இதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

‘‘சுகாதாரமான நிலையில் இருக்கக்கூடிய இறைச்சிகளை அப்படியே தீயில் சுட்டு சாப்பிடுவதால் மோசமான உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், அதில் சுவை, நிறம் போன்ற காரணங்களுக்காக சேர்க்கப்படும் பொருட்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அதிகளவிலான மசாலாப் பொருட்களையும் சேர்த்து நீண்ட நேரம் ஊற வைத்து, பின்னர் தீயில் சுட்டு தயார் செய்கிறபோதுதான் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது.

அதேபோல அதிகளவு தீயில் சுட்டு கருகிய நிலையிலோ அல்லது சரியான அளவில் வேகாமலோ இருக்கிற இறைச்சிகளை சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகக் கூடிய வாய்ப்பு அதிகம். மீன் மற்றும் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகள் அனைத்திலும் தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை இறைச்சிகளின் மீது மசாலாவை தடவி 6 மணி நேரமோ அல்லது இன்னும் கூடுதல் நேரமோ ஊற வைக்கப்படுகிறது.

பார்க்க வண்ணமயமாகவும், சாப்பிடும்போது அதிக ருசியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வகை இறைச்சிகளுடன் உடல்நலனுக்கு தீங்கு உண்டாக்கும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.

இவ்வாறு இந்த இறைச்சிகளை தீயில் அதிக வெப்பநிலையில், தேவையான அளவு நேரம் சுட்டு இவ்வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

மேலும் தந்தூரி உணவுகளில் சரியான முறையில் பதப்படுத்தப்படாத, சுகாதாரமற்ற நிலையிலுள்ள இறைச்சிகள் அல்லது மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்தும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களே உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இதுபோன்ற உணவுகளை அடிக்கடி, அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்சர், வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் மட்டுமல்லாமல் இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப் புற்றுநோய் போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

தந்தூரி உணவு நம் நாட்டு சூழலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும், நமது உடலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும் அவற்றை சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்தால் அவை நம் உடலுக்கு ஏற்ற உணவாக மாறிவிடும். ஆனால், அதற்கு நாம் ஜீரண சக்தி, உணவின் அளவு, கால சூழ்நிலை என்கிற மூன்று விதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.

தந்தூரி வகை இறைச்சி உணவுகளை உட்கொள்ளும்போது நன்றாக பசித்திருக்க வேண்டும். அதை சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இருக்க வேண்டும். புளித்த ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் இவ்வகை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நமது ஜீரண உறுப்புகளின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும் என்பதால், எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகளை இந்நேரங்களில் எடுத்துக் கொள்வதே உடல் நலனுக்கு நல்லது. எனவே நல்ல ஜீரண சக்தி இருப்பவர்களாக இருந்தாலும் இரவு நேரங்களில் இதுபோன்ற தந்தூரி இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மூன்று விதிகளை கருத்தில் கொண்டு தந்தூரி வகை இறைச்சிகளை சாப்பிட்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது.

தந்தூரி முறையில் சமைக்கப்பட்ட இறைச்சியானது மிருதுவாக மாறி எளிதில் ஜீரணிக்கக்கூடியதுதான். இருந்தபோதும் அதை மேற்கண்ட மூன்று விதிமுறைகளையும் பின்பற்றி சாப்பிடுவதே சரியானதாக இருக்கும்.

இந்த வகை இறைச்சியை சாப்பிட்ட பின்பு அஜீரண பிரச்சனை ஏற்படுபவர்கள், ஆயுர்வேத மருந்தகத்தில் கிடைக்கும் அஷ்ட சூர்ணம் என்ற மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை சீரகத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனை சரியாகும்.andoori recipes problems. L

Related posts

இறைச்சில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது

nathan

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

nathan

சுவையான பாகற்காய் சட்னி

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

குடிக்கும் பாதாம் பாலில் இவ்வளவு ஆபத்து இருக்கா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

சுவையான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்

nathan

அன்னாசி பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan