31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

உங்க முகம் பத்தே நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற சில டிப்ஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை பாலுடன் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை உடன காணலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் வீட்டில் இருந்தால், அதன் சாற்றினை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள். இல்லாவிட்டால், ஒரு வெள்ளரிக்காய் துண்டை எடுத்து, முகத்தை சிறிது நேரம் தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இதன் மூலமும் சோர்வுடன் காணப்படும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டலாம்.

உருளைக்கிழங்கு

கருவளையங்கள் உங்கள் முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? அப்படியென்றால் உருளைக்கிழங்கை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவுங்கள். இல்லையெனில் உருளைக்கிழங்கை வெட்டி அதனைக் கொண்டு கண்கள் மற்றும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவுங்கள்.

டூத் பேஸ்ட்

தூங்கி எழுந்து பார்க்கும் போது முகத்தில் பிம்பிள் உள்ளதா? அப்படியெனில் டூத் பேஸ்ட்டை பிம்பிள் மேல் வைத்து, 10 நிமிடம் கழித்து கழுவினால், பிம்பிள் அளவு குறையும்.

தக்காளி

முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், முகத்தின் மென்மைத்தன்மை நீங்கும். ஆகவே முகச்சருமத்தை மென்மையாக்க தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், முகம் அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்

Related posts

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan

தூய்மையான முகம் எப்படி பெறலாம்? சில சிறந்த ஆயுர்வேத குறிப்புகள் !!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…! மீறி போட்டால் ஆபத்து தான்

nathan

கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கின்றனவா? இதோ ஸ்ட்ராபெரி பேஷியல்! –

nathan

உங்கள் மேக்கப் கச்சிதமா வரனும்னு ஆசையா? இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்களேன்!!

nathan

முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

nathan

மேடிட்ட தழும்பை மறையச் செய்யும் சில எளிய வீட்டு சிகிச்சை முறைகள்!!

nathan

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்

nathan

உங்க முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கிறதா?

nathan