36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் நல்லது.

அவற்றில் ஒன்று தான் நம் வீட்டில் இருக்கும் கேரட். கேரட்டை பயன்படுத்தி நமது முகத்தை பாதுகாக்கலாம். கேரட் நம் உடலுக்கு மட்டும் சிறந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் உகந்தது. கேரட் பேஸ் பேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

2 கேரட்டை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். மசித்த கேரட்டுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.

இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் உங்கள் முகம் படிப்படியாக பொலிவடைவதை பார்க்கலாம். மேலும் இந்த கேரட் பேஸ் பேக் பருக்களை போக்கும் தன்மை கொண்டது.

Related posts

பளப் பளப்பான சருமத்தை பெற்றுதரும் மூலிகைப் பொருட்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

nathan

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan

சிறிய கண்களை அழகாக காட்ட டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!

nathan

பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன

nathan

முகம் மிகவும் மிருதுவாக எளிய அழகு குறிப்புகள்!!

nathan

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan