25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800.900.160.90
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

படிக்கத் தவறாதீர்கள் வெந்தய டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே

வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

Related posts

வாழையில் உணவு உண்பதால் இவ்வளவு நன்மையா..?உடல் நலத்திற்கு நல்லது

nathan

mappillai samba rice benefits in tamil – மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகள்

nathan

சுவையான கேழ்வரகு உப்பு உருண்டை

nathan

ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா?சூப்பர் டிப்ஸ்…

nathan

ஆப்பிளை தோலோடு சாப்பிடலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இத படிங்க!

nathan

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி தொக்கு!!

nathan

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

sangika