23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
aiyrai fish curry
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வாய்க்கால் மற்றும் வயல்களிலும், கண்மாய்கள், நீரோடைகளில் மட்டுமே அயிரை மீன்களைக் காண முடியும். முக்கியமாக நெல் அறுவடைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் மட்டும் இவை இருக்கும். அந்த மாதங்களில் மட்டுமே, அயிரை மீன்கள் மார்கெட்டுகளில் விற்பனைக்கும் வரும்.

இறைச்சிகளைப் போன்றே மீன்களிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. சொல்லப்போனால், இறைச்சிகளை விட மீன்களில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் மிகவும் சிறிய அளவுடைய அயிரை மீனில், நாம் நினைத்திராத அளவில் நன்மைகள் அடங்கியுள்ளன.

குறிப்பாக இந்த மீன்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது எளிதில் செரிமானமாகிவிடும். அயிரை மீன்களை கருவாட்டு வடிவில் சாப்பிட்டாலும், அதன் நன்மைகளைப் பெறலாம். சரி, இப்போது அயிரை மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

சத்துக்கள் அயிரை மீன்களில் அதிகளவு புரோட்டீன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் சாச்சுடேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமான அளவிலும் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளது.

நன்மை #1 அயிரை மீனில் உள்ள அதிகளவிலான அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், சாச்சுரேட்டட் கொழுப்புக்களைப் போன்று இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யாமல், எளிதில் செரிமானமாகி இரத்த ஓட்டத்தில் இடையூறு செய்யாமல், இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும். ஒருவேளை உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பின், இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கலாம்.

நன்மை #2 சில ஊட்டச்சத்து நிபுணர்கள், இறைச்சிகள் ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதாக கூறுகின்றனர். அதாவது இறைச்சிகளை உண்பதால், ஹார்மோன் சம்பந்தமான நோய்களான சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகரிக்குமாம். ஆனால் அயிரை மீனை உண்பதால், சர்க்கரை நோய்க்கான அபாயம் குறைவதாக கூறுகின்றனர்.

நன்மை #3 புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருப்பது ப்ரீ ராடிக்கல்களாகும். இருப்பினும் சில வகையான புற்றுநோய் செல்கள் ஹார்மோன்களின் செயல்பாடுகளாலும் வளர்ச்சி பெறும். அப்படி ஹார்மோன் செயல்பாடுகளால் வரும் புற்றுநோய் தான் மார்பக புற்றுநோய். ஆனால் அயிரை மீனை உட்கொண்டால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

நன்மை #4 அயிரை மீனால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது. இந்த சிறிய மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள், இரத்த ஓட்டத்தை சீராகப் பராமரித்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நன்மை #5 கண்களைத் தாக்கும் மாகுலர் சிதைவு நோய் பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டோரைத் தாக்கி, பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். ஆனால் அயிரை மீனை ஒருவர் உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், அதில் உள்ள போதுமான வைட்டமின்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாகுலர் சிதைவு நோயைத் தடுக்கும்.

நன்மை #6 நன்னீரில் வளரும் அயிரை மீனில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், பார்வைக் கோளாறைத் தடுக்கும். மேலும் மாலைக் கண் நோய் மற்றும் சில நாள்பட்ட கண் நோய்களையும் தடுக்கும்.

நன்மை #7 அயிரை மீனியில் உள்ள புரோட்டீன், வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே சரும பிரச்சனைகள் வராமல் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமானால், அயிரை மீனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்மை #8 நினைவாற்றல் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அயிரை மீனை சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் பாஸ்பரஸ், மூளையின் வளர்ச்சிக்கு உதவும். எனவே உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு அயிரை மீனைக் கொடுங்கள்.

நன்மை #9 அயிரை மீனில் பாஸ்பரஸ் மட்டுமின்றி, எலும்புகளை வலிமையாக்கத் தேவையான கால்சியமும் உள்ளது. ஆகவே வளரும் குழந்தைகளுக்கு அயிரை மீனை அடிக்கடி கொடுங்கள். இதனால் அவர்களது எலும்பு வளர்ச்சி பெறுவதோடு, வலிமையும் ஆகும்.

நன்மை #10 அயிரை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

நன்மை #11 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அயிரை மீனைக் கொடுங்கள். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும்.

நன்மை #12 உடலில் உள்ள சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய புரோட்டீன் சத்து அவசியம். இத்தகைய சத்து பால், முட்டை போன்ற உணவுகளில் இருந்தாலும், அயிரை மீனில் இச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. எனவே உடலில் இருக்கும் சேதமடைந்த திசுக்களை வேகமாக சரிசெய்ய அயிரை மீனை அடிக்கடி சாப்பிடுங்கள்.

குறிப்பு #1 அயிரை மீன் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், வாரத்திற்கு 3 முறைக்கு மேல் உட்கொள்ளக் கூடாது என மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.

குறிப்பு #2 அயிரை மீனை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். ஆனால் அயிரை மீன் கருவாட்டை சமைக்கும் முன், முதலில் அதை லேசாக வறுக்க வேண்டும்.

குறிப்பு #3 வறுத்த பின், அந்த கருவாட்டை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்ட வேண்டும். பின் அந்த கருவாட்டை மீண்டும் சுத்தமான நீரில் கழுவவும்.

குறிப்பு #4 இறுதியாக அந்த கருவாட்டை விருப்பமான முறையில் சமைத்து சாப்பிடலாம். ஆனால் மீனை அளவுக்கு அதிகமாக சூடேற்றி வேக வைத்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடும்.

aiyrai fish curry

Related posts

உயிரை பறிக்கும் நிச்சயம்?தயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

உங்கள் கவனத்துக்கு தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா?

nathan

முயன்று பாருங்கள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு!!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஒரு கையளவு வேர்கடலை போதும்…! இதய நோய் உங்களை கண்டாலே அலண்டு ஓடி விடும்?

nathan

ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

கோடையில் டயட்டில் இருக்கும் போது கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika

இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்தி மீன்

nathan