28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
thyjhm
ஆரோக்கிய உணவு

இரும்புச்சத்து நிறைந்த வல்லாரை!

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்ததிற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலுள்ளது.

வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிபடுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால், வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்துவிடும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும். தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல் நோய்களை கட்டுப்படுத்தும். படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும்.

உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். இந்தக் கீரையை சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால், வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.thyjhm

Related posts

தெரிஞ்சிக்கங்க…பீர்க்கங்காயை சாப்பிடுவதால் என்ன மாதிரியான நோய்கள் குணமாகிறது தெரியுமா?

nathan

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்தாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மல்கோவா மாம்பழம்

nathan

அவசியம் படிக்க..இவர்கள் மட்டும் கிரீன் டீ குடித்தால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்!குழந்தைகளுக்கு தினமும் இட்லி கொடுப்பது நல்லதா?

nathan

துத்திக் கீரை சூப்

nathan

பாலை விட அதிக புரதச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan