29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
00
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க உடல் முழுவதும் வியர்வை நாற்றமா? அப்ப இத படிங்க!

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.
இந்த வியர்வையை நிறுத்தினால் உடல் பாதிக்கும் ஆனால் வியர்வை வாடையில்லாமல் செய்யலாம். என்ன சென்டாக இருந்தாலும் 3 மணிநேரம் தான் அப்புறம் வியர்வையோடு கலந்து அது ஒரு வாடையாகிவிடும். சிலருக்கு தோல் புற்று நோய் வந்துவிடும். அலர்ஜியை உண்டாக்கும்.

கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று. கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.

இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.குளிக்கும் தண்ணீரில் டெட்டால் போட்டு தொடர்ந்து குளித்து வரும்போது, வியர்வை நாற்றம் போய்விடும்.குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும். காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு, பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும்.

கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் சில வாரங்கள் தொடர்ந்தாலே போதும்.

ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து, அதை அக்குளில் தடவி சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சு உருண்டையில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2-3 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால் பல கிடைக்கும்.சிறிது ரோஸ் வாட்டரை அக்குளில் தடவலாம் அல்லது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து குளித்தால் துர்நாற்றம் நீங்கும்.

தக்காளி கூழை நேரடியாக அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வர வேண்டும்.தினமும் குளிக்கும் முன், ஒரு துண்டு எலுமிச்சையை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.00

Related posts

மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

nathan

இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கு படுக்கையறையில் செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள்

nathan

நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!

nathan

நறுக்குன்னு நாலு டிப்ஸ் : மனைவியோடு படுக்கையறையில் இணைவதை பற்றி

nathan

விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி.!!

nathan

30 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan