31.1 C
Chennai
Wednesday, Jul 30, 2025
Dates2
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்?

பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கு குறைவில்லை. பேரீச்சம் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர். ஆனால் பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் குறைவில்லை.

கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக பேரீச்சை உண்ணப்பட்டு வருகிறது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன.

தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாகும்.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டியுள்ள சர்க்கரை நோயாளிகள் கூட பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.ஏதேனும் காயத்தால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

பேரீச்சம்பழ சாறு ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.பேரீச்சம் கொட்டையை வறுத்துப் பொடி செய்து, காபி போல் பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதி யுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதி நிற்கும்.தினசரி 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அமிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.Dates2

Related posts

உங்களுக்கு தெரியுமா பூண்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் பயன்படுத்தலாம்

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதாம்…

nathan

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தண்ணீரில் ஊறவைத்த பயறை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாமா?

nathan

எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்

nathan

எச்சரிக்கை! தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்

nathan

இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

அவசியம் படிக்கவும் ! அன்றாட உணவில் கருப்பு உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan