25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 1511342771 amla
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ஆபத்தான நோயான ரத்த அழுத்தத்தை தடுக்கும் நெல்லிக்காய் வத்தல்!

ரத்தக் கொதிப்பு! இதய நோயைக் காட்டிலும் ஆபத்தான நோய் இது. ரத்தக் குழாய் சுருங்குவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் , மரபியல் ஈதியாக என உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. எப்படியும் சாகத்தான் போகிறமென சொல்லிக் கொண்டு ஆகாததையெல்லாம் சாப்பிட்டு, கண்ட நோய்களை வரவழைத்துக் கொண்டு மாத்திரை, மருந்துகளோடுதான் சாவது சந்தோஷமா? அதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால், எந்த நோயும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்துவிட்டுப் போலாமே..

ஏனென்றால் உயர் ரத்த அழுத்தத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரத்தம் சீராக பாய்வது தடைப் பட்டு (ஏதாவது தடங்கலினால்) திடீரென அழுத்தம் அதிகரித்து வேகமாக பாய்வதால் ஏற்படுவதுதான் ரத்த அழுத்தம். ரத்த அழுத்தத்தை சரியாக கவனிக்கவில்லையென்றால் அவை இதய நோய், பக்க வாதம். மூளை நோய்கள் என கோமா வரை கொண்டு செல்லும். ரத்தக் கொதிப்பு வராமல் காக்க வேண்டியது உங்கள் கையில்தான் இருகிறது. நல்ல வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை தேர்ந்தெடுங்கள். எந்தெந்த மூலிகைகள் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் என இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பச்சைப் பயிறு மற்றும் நெல்லி வத்தல் தேவையான பொருட்கள்: நெல்லி வற்றல். பச்சைப்பயிறு.

செய்முறை: நெல்லி வத்தல் மற்றும் பச்சைப்பயிறு சம அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டர் வரும் வரை சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும். நெல்லி வத்தல் எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதனை சாதரணமாகவே குழம்பு மற்றும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தம் சுத்தமாகும்.

அகத்திக் கீரை : அகத்தி கீரை, சுண்டல் வத்தல் ஆகிய இரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு : தேவையான பொருள்கள்: கறிவேப்பிலை எலுமிச்சைச்சாறு.

செய்முறை: கறிவேப்பிலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு அரை ஸ்பூன் கலந்து காலையில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் ரத்த அழுத்தம் முழுக்க கட்டுக்குள் வந்துவிடும். பாதிக்கப்பட்ட குழாய்களில் இருக்கும் கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும்.

பூண்டுப் பால் : தேவையானப் பொருள்கள்: பால். பூண்டு

செய்முறை: பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

கற்பூரவல்லி : கற்பூர வல்லியில் இருக்கும் கார்வோக்ரால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதோடு, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, இதய நோய்கள் வராமல் காக்கின்றது

சாப்பிடும் முறை : கற்பூர வல்லியை தினமும் 2 இலைகள் சாப்பிடுவது எளிதான வேலை. அப்படி சாப்பிட பிடிக்காதென்றால் டீயுடன் இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்., சூப் செய்து சாப்பிடலாம்.

லாவெண்டர் : லாவெண்டர் எண்ணெய்க் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்வதால் ரத்த அழுத்தம் குறையும் என்பது தெரியுமா? மசாஜ் போலவே, லாவெண்டரை சாப்பிட்டாலும் ரத்த அழுத்தத்திலிருந்து விடுதலை பெறலாம்.

பயன்படுத்தும் முறை : தினமும் இரு வேளை லாவெண்டர் தேநீர் செய்து குடியுங்கள். வாரம் 2 நாட்கள் லாவெண்டர் எண்ணெயால மசாஜ் செய்து கொள்ளலாம். அற்புதமான தீர்வை இது தரும்.

குதிரை வாலி : ரத்த அழுத்தத்திற்கும் , உடலில் நீர் கோர்த்துக் கொள்வதற்கும் (fluid retention) மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆதலால் உடலில் உருவான கெட்ட நீரை தேங்க விடாமல் வெளியேற்றிக் கோண்டிருக்க வேண்டும். குதிரை வாலி உடலில் உருவாகும் கெட்ட நீரை வெளியேற்றும் இதனால் குழாய்களில் உண்டாகும் வீக்கத்தையும் உயர் ரத்த அழுத்தத்தையும் தவிர்க்கலாம்.

பயன்படுத்தும் முறை : குதிரை வாலி கஞ்சி செய்து குடித்தால் ரத்த அழுத்தம் குறையும். இல்லையென்றால் அதன் இலைகளை தேநீர் தயாரித்து அருந்தலாம்.

சாமந்திப் பூ : குதிரை வாலி போலவே சாமந்திப் பூ போலவே கெட்ட நீரை வெளியேற்றுகிறது. இது சிறு நீரக செயல்களை தூண்டுவதால் கழிவுகள், வேண்டாத கனிமச் சத்துக்கள் உடலில் தங்காமல் வெளியேற்றப்படுகின்றன. ரத்தக் குழாய்களும் சுத்தபப்டுத்தப்படுகின்றன.

சாப்பிடும் முறை : சாமந்திப் பூ பொடி அரை ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடிக்கலாம். அதுபோலவே தேநீர் தயாரித்து தினமும் 2 முறை குடிக்கலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தை அதிகரிக்க : சிலருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும் , இது இன்னும் ஆபத்தானது. ஏனென்றால் ரத்த அழுத்தம் குறையும்போது மயக்கமடைந்துவிடுவார்கள். அவர்களுகு உடனடியாக உப்பும் சர்க்கரையும் தர வேண்டும். இப்படி வெளியில் செல்லும்போது அல்லது வண்டியில் செல்லும்போது உண்டானால் அதைவிட ஆபத்து எதுவுமில்லை. அந்த மாதிரி இக்கட்டான நேரங்கலை தவிர்க்க இந்த மூலிகைகள் உதவும் . அவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.

தகரை இலைகள் : தகரை இலைகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றவை. ரத்த ஓட்டத்தை தூண்டுவதால் இதயத்துடிப்பும் வேகம் பெறுகிறது. ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் தகரை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

சாப்பிடும் முறை : தகரை இலைகளை சாறு எடுத்து அதனை உட்கொள்ள வேண்டும். அதுபோலவே இரவு தகரை இலைகளைக் கொண்டு தே நீர் தயாரித்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையாமல் இருக்கும்.

குறைவான ரத்த அழுத்தம் குணப்படுத்த : தேவையான பொருள்கள்: ஜடமாம்சி வேர். கற்பூரம். இலவங்கப்பட்டை.

செய்முறை: குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமாம்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டைகளை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் அதிகமாகும்.

ரத்த அழுத்தத்திலிருந்து பாதுக்காக என்ன செய்வது? மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

உப்புக் கண்டம் உள்ள உணவுகள் : உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

பழங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக பழங்களை சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக செயல்படும்.

எந்த மாதிரி எண்ணெயை பயன்படுத்தலாம்? நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், போன்றவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். ஆனால் மாற்றி மறு சுழற்சி செய்வது கூடாது. ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது.

கேக் வகைகள் : கேக்குகள், குக்கீஸ்களில் சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளை அடிக்கடி சாப்பிடுவதால் கூட ரத்த அழுத்தம் ஏற்படுகிறது

மது : மது குடிப்பதும் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு வழி தரும் . இது ரத்த குழாய்களை வெகுவாக பாதிக்கும். அதுபோல் மது அருந்தும்போது துரித உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. அவையும் உயர் ரத்த அழுத்த பிரச்சினையை தருவதோடு மட்டுமல்லாமல் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களுக்கும் காரணமாகும்.

22 1511342771 amla

Related posts

சூப்பரான கருப்பு உளுந்து கஞ்சி

nathan

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிறப்பான உணவுகள்!!!

nathan

சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்

nathan

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

nathan

இந்த பழத்தை தினமும் 2 சாப்பிட்டு பாருங்க..அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

pitham symptoms in tamil – பித்தம் அறிகுறிகள்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த அவரைக்காய்

nathan

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

nathan

தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?

nathan