28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இட்லி சாம்பார் ஈசியாக செய்வது எப்படி என்று?

தனிச்சுவையுடன் கூடிய இட்லி சாம்பாரை எளிதில் செய்ய வேண்டும் என்றால் ஒரு சுலபமான வழி உண்டு. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் :
துவரம்பருப்பு – 25 கிராம்
பாசிப்பருப்பு – 25 கிராம்
கடலைப்பருப்பு – 25 கிராம்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 4
சாம்பார் பொடி – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 4
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி இறக்கவும்.

சுவையான இட்லி சாம்பார் தயார்.
மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

Related posts

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாளின் மேலும் பல பயன்கள்

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பல நோய்களை குணப்படுத்தும் முருங்கை விதைகள்..!

nathan

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

nathan

தூதுவளையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல!…

sangika

சூப்பரான நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

nathan

ருசியான பலாக்கொட்டை சமையல்!

nathan

சாப்டுற எந்த உணவு கம்மியான கொலஸ்ட்ரால் கொண்டதுன்னு உங்களுக்கு தெரியுமா?

nathan