20180110 115747
ஆரோக்கிய உணவு

காலையில் அருந்தி பாருங்கள் உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்…

தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும் அவ்வளவுதான்.

சீரகத் தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம்.

அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.

சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும்.

சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிப்பதற்கு சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது.

அது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!20180110 115747 1024x573

Related posts

வெறும் 10 நிமிடத்தில் வாழைத்தண்டு சாலட் சாப்பிடனுமா?

nathan

உருளை கிழங்கு கைமா..!செய்வது எப்படி.?!

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் 12 கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்…!

nathan

இதயத்தைக் காக்கும் காளான்

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan