33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
sl4358
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப்,
தக்காளி, வெங்காயம் – தலா 1,
பூண்டு – 2,
இஞ்சி – அரை துண்டு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துண்டுகள் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,
தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், எண்ணெய் –
ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை விழுதாக அரைக்கவும். கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.sl4358

Related posts

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கீரைகளும் மருத்துவப் பயன்களும் 40 வகை

nathan

அடிவயிற்று கொழுப்பை கரைத்து விரட்டும் ஒரு துளி சாறு….பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாதம் வடிக்கும் போது இனி யாரும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்…

nathan

சுவையான ஆரோக்கியமான துளசி டீ

nathan

நீரிழிவு உள்ளவர்கள் கரட், பீற்றுட் உண்ணலாமா? – Dr.சி.சிவன்சுதன்

nathan

உங்களுக்கு தெரியுமா போலியான தேனை எப்படி கண்டறியலாம்?

nathan

இத சாப்பிட்டா இரும்புச்சத்து குறைபாடு எப்பவுமே வராது!தெரிஞ்சிக்கங்க…

nathan