25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
02 198
ஆரோக்கிய உணவு

இதோ மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் !இத படிங்க!

இங்கு மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

காய்கறிகளுள் முள்ளங்கி வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது.

முள்ளங்கியை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதை விட, ஜூஸ் வடிவில் எடுத்தால், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும். இப்போது முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

முள்ளங்கி ஜூஸில் உள்ள சத்துக்கள்
முள்ளங்கி ஜூஸில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு போன்றவை வளமாக உள்ளது.

நன்மை #1
முள்ளங்கி ஜூஸ் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள், வைரஸ்கள் போன்றவற்றை வெளியேற்ற உதவும்.

நன்மை #2
கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் நொதிகளின் வெளியீட்டிற்கு உதவும்.

நன்மை #3
முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

நன்மை #4
கல்லீரலில் உள்ள அதிகப்படியான அளவில் இருக்கும் பிலிரூபினை வெளியேற்றி, மஞ்சள் காமாலையில் இருந்து முள்ளங்கி ஜூஸ் விடுவிக்கும்.

நன்மை #5
முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது.

நன்மை #6
முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

நன்மை #7
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

குறிப்பு
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து குடிப்பது என்பது முடியாத ஒன்று. ஆகவே அந்த முள்ளங்கி ஜூஸை, கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸ் உடன் கலந்து குடியுங்கள்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்02 198

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…

nathan

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

தெரிஞ்சிக்கங்க…இனி ரோஜா மொட்டுகளை கீழ தூக்கி வீசாதீங்க! டீ போட்டு குடித்தால் இந்த பிரச்சினைகளெல்லாம் சரியாகுமாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தேனை தெரிந்து கூட இதனுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகள் என்ன?

nathan

கொரோனாவில் இருந்து மீளவைக்கும் உணவுத்திட்டம்! என்னென்ன என்று பார்க்கலாம்.

nathan

பதநீரில் இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா…..!!

nathan

தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

nathan