25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3 fiberfoods 1518512080
ஆரோக்கிய உணவு

ஆண்களே உங்களுக்கு நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா?

ஒவ்வொருவருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும். இதற்காக பெண்கள் பல ஆன்டி-ஏஜிங் க்ரீம்கள், மாஸ்க்குகளைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சில சமயங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று பல அழகு பராமரிப்பு செயல்களையும் மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.

ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி, உணவுகளின் மூலம் இளமையைத் தக்க வைப்பது தான். ஆம், நாம் நமது இளமையை ஒருசில உணவுப் பொருட்களின் மூலம் தக்க வைக்க முடியும். அதற்கு சரியான உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுவும் சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் தக்க வைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.

தங்கள் அழகையும், இளமையையும் பாதுகாக்க ஆண்களால் உணவுப் பொருட்கள் மூலம் தான் தக்க வைக்க முடியும். அதற்கு ஆன்டி-ஏஜிங் உணவுகளைத் தேர்ந்தெடுத்து அன்றாட டயட்டில் சேர்த்துக் கொண்டாலே போதும். இங்கு ஆண்களின் இளமையைத் தக்க வைக்க உதவும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை சாலட்டாக தயாரித்து தினமும் சாப்பிட்டு வந்தாலே இளமையைத் தக்க வைக்கலாம்.

ப்ளூபெர்ரி ப்ளூபெர்ரி பழங்களின் சுவையை அற்புதமாக இருப்பதோடு, இதில் கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது ஆண்களின் இளமையைத் தக்க வைக்கும் உணவுகளுள் சிறப்பான ஒன்று. பொதுவாக பெர்ரி பழங்களில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. அதில் ப்ளூபெர்ரியில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சரும செல்கள் பாதிப்படையாமல் தடுத்து, இளமையைத் தக்க வைக்கும்.

தண்ணீர் மனிதனின் டயட்டில் தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரைக் குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, இளமை தக்க வைக்கப்படும். குறைவான அளவில் குடித்தால், அது மிகுந்த சோர்வை உண்டாக்குவதோடு, உடல் சூட்டையும் அதிகரித்து, சரும செல்களை பாதிக்கும்.

நார்ச்சத்து நார்ச்சத்துள்ள உணவுகளான முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கலையும் தடுக்கும். அதோடு கொலஸ்ட்ரால் அளவு, உட்காயங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். நார்ச்சத்துள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். இப்படி உடலில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருந்தாலே, நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம்.

சால்மன் சால்மன் மீன் இதய நோய்களைத் தடுக்கும் மற்றும் ஆண்களின் இளமையைத் தக்க வைக்கவும் உதவும். அதிலும் வாரத்திற்கு 2 முறை சால்மன் மீனை சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளை, சருமம், மூட்டு இணைப்பு மற்றும் இதயத்தைப் பாதுகாத்து, நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வைக்கும்.

தக்காளி தக்காளியில் லைகோபைன் ஏராளமான அளவில் உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, நுரையீரல் புற்றுநோய் வராமலும் தடுக்கும். அதிலும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், நல்ல பலன் கிடைக்கும். ஆய்வு ஒன்றில், தக்காளியை சூடேற்றும் போது, அதிலிருந்து லைகோபைன் அதிகளவு வெளிப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தயிர் தயிரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலிமையாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே சமயம் இதில் வைட்டமின் டி இருப்பதால், தயிரில் உள்ள கால்சியம் உடலால் முழுமையாக உறிஞ்சப்படுகிறது. மேலும் இது எளிதில் செரிமானமாகக்கூடும். இதில் புரோட்டீனும் வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனை அன்றாட உணவில் ஆண்கள் சேர்த்து வந்தால், அது நீண்ட நாட்கள் இளமையை தக்க வைக்கும்.

காபி காலையில் ஒரு கப் காபியைக் குடித்து தான் பலரும் அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். சில ரிப்போர்ட்டுகள், காபி குடித்தால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவாக சொல்கிறது. அதோடு காபி பர்கின்சன் நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். எனவே இளமையுடன் இருக்க நினைத்தால், தினமும் ஒரு கப் காபி குடியுங்கள்.

ரெட் ஒயின் ரெட் ஒயினானது இரத்தம் உறைவதைத் தடுக்கும், இரத்த அழுத்த பிரச்சனையை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ரெட் ஒயினை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால் தீமையைத் தான் சந்திக்க நேரிடும். அதுவே அளவாக குடித்தால் நன்மையே விளையும். அதிலும் ஆண்கள் ஒரு நாளைக்கு 2 சிறிய டம்ளரும், பெண்களாக இருந்தால் ஒரு சிறிய டம்ளரும் குடிப்பது நல்லது. ஆகவே இளமையுடன் இருக்க நினைத்தால், ரெட் ஒயினை அளவாக குடியுங்கள்.

ப்ராக்கோலி ப்ராக்கோலியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் உள்ளது. அத்துடன் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இத்தகைய ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நீண்ட நாட்கள் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கலாம்.

நட்ஸ் நட்ஸ்கள் அனைவரும் விரும்பி சாப்பிட ஏற்ற ஓர் ஸ்நாக்ஸ். இதில் நார்ச்சத்து, புரோட்டீன், ஒமேகா-3, அன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை அதிகம் உள்ளது. இதனை ஒருவர் ஸ்நாக்ஸ் நேரத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாகி, சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, நீண்ட நாட்கள் இளமையுடனும் இருக்கலாம்.

அவகேடோ அவகேடோ பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதோடு, இரத்தத்தில் நல்ல கொழுப்புக்களின் அளவை மேம்படுத்தும். அதோடு, இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ளும். எனவே முடிந்தால், தினமும் அவகேடோ மில்க் ஷேக்கை குடித்து வாருங்கள்.

திராட்சை திராட்சை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும் நிறைந்துள்ளது. எனவே நீங்கள் இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க நினைத்தால், தினமும் ஒரு கையளவு திராட்சையை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். இல்லாவிட்டால், திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

செர்ரி செர்ரிப் பழத்தில் அந்தோசையனின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு வளமான அளவில் உள்ளது. இது நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க உதவுவதோடு, மூட்டுக்களில் யூரிக் அமிலங்கள் படிவதைத் தடுத்து, மூட்டு பிரச்சனைகள் வராமல் தடுக்கும். ஆய்வு ஒன்றிலும் 2 நாட்கள் தொடர்ந்து செர்ரி பழத்தை சாப்பிட்டவர்களுக்கு, சாப்பிடாதவர்களை விட 35% மூட்டு பிரச்சனைகளின் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பால் பால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மட்டும் தான் மேம்படுத்தும் என்று நினைத்தால், அது தவறு. இதில் உள்ள புரோட்டீன் தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்வதோடு, தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும் வயது அதிகரிக்கும் போது ஒருவர் பாலை தினமும் அதிகம் குடித்து வந்தால், எலும்புகளின் வலிமை அதிகரித்து எலும்பு பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம். மேலும் பால் ஒருவரது தோற்றத்தை சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வெளிக்காட்ட உதவும்.

ஆப்பிள் ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் ஆப்பிளில் கரையாத நார்ச்சத்துக்களும் இருப்பதால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். ஆனால் எப்போதும் ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் ஆப்பிளின் தோலில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்தும், சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

3 fiberfoods 1518512080

Related posts

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

nathan

அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடுபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்

nathan

இலவங்கப்பட்டையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தமல்லியில் இத்தனை மருத்துவ குணங்களா?

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

பல்வேறு நோய்களை எளிதாக தீர்த்து வைக்கும் வெண்டைக்காய்

nathan

மூளைக்கு வலுவை தரும் பலாக்காய் கூட்டு

nathan

நீங்கள் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டால், இனி சர்க்கரையை தூக்கி எரிந்து விடுவீர்கள்!! அவசியம் படிக்கவும்….

nathan