மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே மனிதர்களுக்கு முடி வளர்கிறது.
கண் இமைகள், புருவம், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகள் என மனிதர்களுக்கு சில இடங்களில் வளரும் முடிகள் மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், சமீப காலமாக ஃபேஷன், அழகு என்ற பெயரில் நாம் மொத்தமாக முடிகளை அகற்றி விடுகிறோம்.
இனி, ஏன் மனிதர்கள் அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகள் அகற்ற கூடாது என்பது குறித்து பார்க்கலாம்…
என்ன காரணம்?
நமது உடலில் ஆங்காங்கே முடி வளர்வது சில காரனங்களுக்காக தான். உதாரணமாக, இமைகள் கண்களை தூசு படாமல் பாதுகாக்கிறது, புருவம், வியர்வை கண்களை பாதிக்காமல் இருக்க உதவுகிறது, மூக்கு மற்றும் காதுகளில் வளரும் முடி நுண்ணிய பொருட்கள் உடலுக்குள் புகாமல் இருக்க உதவுகிறது.
தலைமுடி!
தலைமுடி அதிக வெப்பம் மற்றும் குளிர் தலை மற்றும் மூளையை பாதிக்கலாம் இருக்க உதவுகிறது. ஒருவேளை வெப்பம், மற்றும் குளிர் நேரடியாக தலையில் தாக்கத்தை உண்டாக்கினால், மூளையிலும் தாக்கம் உண்டாகும். உடலில் வளரும் முடிகளும் இதே காரணத்திற்காக தான் வளர்கின்றன. பாதுகாப்பை அளிக்கின்றன.
பூரித்து போகும் போது முடி எழுதல்!
சில சமயம் நீங்கள் பூரிப்படையும் போது முடிகள், எழும்பி நிற்கும். இதற்கு காரணம். ஒவ்வொரு தனி முடியும், தசையுடன் சேர்ந்து, தொடர்புக் கொண்டு இருக்கிறது.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #1
முதல் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அதிக வெப்பம் ஆதல் சரியானதல்ல. இப்பகுதிகளில் வளரும் முடி, அதிக வெப்பம் ஆகாமல் பாதுகாக்கின்றன.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #2
இரண்டாம் காரணம், நடக்கும் போது, ஓடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் உராய்வை இப்பகுதிகளில் வளரும் முடிகள் குறைக்க உதவுகின்றன.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #3
மூன்றாம் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடிகள், உடலுறவு உணர்சிகளை தூண்ட உதவுகின்றன.
மேலும், தாடி, அக்குள், பிறப்புறுப்பு பகுதில் வளரும் முடிகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நீங்கள் குளித்து சுத்தமாக இருந்தால் போதுமானது. இவ்விடங்களில் முடிகளை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உண்மைகள்!
* சராசரியாக ஒரு மனிதரின் தலையில் மட்டும் 1,30,000 முடிகள் இருக்கின்றன.
* இதில் 93% தற்போது வளர்ந்து கொண்டிருக்கும்.
* மாதத்திற்கு 1 சென்டிமீட்டர் அளவு முடி சராசரியாக வளர்கிறது.
* ஒருநாளுக்கு சராசரியாக உங்களுக்கு நூறு முடிகள் வரை உதிரும்.
* ஆராய்ச்சியாளர்களுக்கு உங்களை பற்றி அறிய வெறும் மூன்று சென்டிமீட்டர் முடி போதுமானது.
* முடிகளின் வாழ்நாள் சராசரியாக ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளும், பெண்களுக்கு நான்கு ஆண்டுகளும் ஆகும்.
– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.