31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

பாதவெடிப்பை நீக்கி பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ் …!

சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் பாத வெடிப்புகள் வரும். அதை போக்க எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேய்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.

தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.
மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தன்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள இறந்த செல்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை, அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யலாம்.

Related posts

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விடுங்கள் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம் தெரியுமா ?

nathan

குளிர் காலத்துலயும் சருமம் பட்டு போல மாறனுமா? இந்த ஹெர்பல் க்ரீம் யூஸ் பன்ணுங்க

nathan

வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கை முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள், இயற்கையான முறையில் தங்களுடைய சரும அழகை அதிகரிக்க முடியும்..

nathan

இயற்கை அழகு சாதனங்கள்

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு!

nathan

கழுத்துப் பராமரிப்பு

nathan

முகத்தை பொலிவாக்கும் ஆலிவ் எண்ணெய்!

nathan