25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
paakarkai
ஆரோக்கிய உணவு

பாகற்காய்னு சொன்னாலே வாய் கசக்குதா?… அப்ப இத படிங்க!

பாகற்காய் என்று சொல்வதற்கே சிலருக்கு வாயெல்லாம் கசக்கும். அதை சாப்பிடுவதை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வரும். ஆனா்ல உண்மையிலேயே பாகற்காய்க்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் நாம் அப்படியெல்லாம் சொல்லவே மாட்டோம்… அப்படி பாகற்காய்க்குள்ள என்னதாங்க இருக்குன்னு கேட்குறீங்களா?… நீங்களே படிச்சுப்பாருங்க.

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோயாளிகளுக்கு, பாகற்காய் நல்ல மருந்தாகும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு “கப்” பாகற்காய் “சூப்” எடுத்து, அதில் ஒரு “ஸ்பூன்” எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்paakarkai

Related posts

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு பொரியல்

nathan

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சுவையான… ரவா ரொட்டி

nathan

வியக்க வைக்கும் மருத்துவம்! கடுகு விதைகளை தமிழர்கள் ஏன் உணவில் சேர்த்தார்கள் தெரியுமா?

nathan

செம்பருத்தி பூ இருக்கா! மருத்துவரே தேவை இல்லை…. பானம் செய்து குடிங்க போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நல்லெண்ணெய் உபயோகித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?

nathan

கேரட் ஜீஸ் செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன?

nathan

30 வயதை தாண்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? சர்க்கரைவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் ?

nathan