30.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
07 1444198540 1 cashewnuts
ஆரோக்கிய உணவு

மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள்!!!

நீங்கள் உணவுப் பிரியரா? உங்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தி. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சில நம் உயிருக்கே உலை வைக்குமாம். அதிலும் நீங்கள் வித்தியாசமான உணவுகளை சுவைக்க விரும்புபவராயின் கவனமாக இருங்கள். அதுமட்டுமின்றி, தற்போது பல வித்தியாசமான உணவுப் பொருட்கள் சூப்பர் மார்கெட்டுகளில் கிடைப்பதால், அவற்றை சுவைக்கவும் விரும்புவோம்.

நாம் உண்ணும் சில உணவுகள், நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டும். ஆனால் அப்படி உணவுகளை அதிகமாக உண்ணும் போது, அதனால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொன்னால் நம்பமாட்டீர்கள், நாம் சாப்பிடும் முந்திரி, வேர்க்கடலை, பால் போன்றவை கூட நமக்கு கேடு விளைவிக்கும் என்றால் பாருங்களேன்.

சரி, இப்போது நமக்கு கேடு விளைவிக்கும் மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பச்சை முந்திரி உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்களில் பச்சை முந்திரியும் ஒன்று. ஆய்வுகளின் படி, பச்சை முந்திரியை வேக வைத்து உடைத்து சாப்பிடாமல், உலர வைத்து உடைத்து உட்கொண்டால், அதனால் சருமத்தில் அலர்ஜி ஏற்படுவதோடு, அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கும். ஏனெனில் பச்சை முந்திரியின் மேல் பகுதியில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த உருஷியோல் என்னும் மோசமான கெமிக்கல் உள்ளது. இதனால் அது சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

காட்டு காளான் காட்டு காளான்களும் மிகவும் ஆபத்தான உணவுப் பொருளாகும். காட்டுக் காளானை சிறிது கடித்தாலும், அது வாந்தியை ஏற்படுத்தும். அதையே அதிகமாக உண்டால், அது மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

பஃபர் மீன் (Puffer Fish) பஃபர் மீன்கள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. உலகில் சில பகுதிகளில் இதனை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது, இதனை முறையாக சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சையனைடை விட மோசமான விஷமானது, உயிரையே பறித்துவிடும்.

கூவை கிழங்கு (Cassava) கிழங்குகளில் ஒன்றான கூவைக் கிழங்கும் மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த கிழங்கை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள நொதியானது சையனைடாக மாறி, உயிருக்கே உலை வைத்துவிடும்.

வேர்க்கடலை சிலருக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அலர்ஜி உள்ளவர்கள் வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

ருபார்ப் (Rhubarb) ருபார்ப் தண்டுகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதில் உள்ள இலைகளை முற்றிலும் நீக்கிவிடுங்கள். ஏனெனில் ருபார்ப் இலைகள் விஷத்தன்மை வாய்ந்தது. இந்த விஷத்தன்மையினால் அது மனிதனின் உயிரையே பறித்துவிடும்.

முளைக்கட்டிய அவரை ஜெர்மனியில் நடந்த ஓர் சம்பவத்தில் இருந்து, முளைக்கட்டிய அவரையில் மிகவும் ஆபத்தான ஈ-கோலை இருப்பது தெரிய வந்தது. முளைக்கட்டிய அவரையை உட்கொண்டதால் பல மக்கள் இறந்ததோடு, நோய்வாய்ப்பட்டனர்.

கடல் சிப்பி கடல் சிப்பியும் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஆபத்தானது. அதிலும் உங்களுக்கு கடல் சிப்பியால் அலர்ஜி என்றால், அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது கடுமையான அரிப்பு, அடிவயிற்று வலி மற்றும் சில நேரங்களில் வாழ்க்கையே உலை வைத்துவிடும்.

எல்டர்பெர்ரி (Elderberry) ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த செடியான எல்டர்பெர்ரியின் இலைகள் மற்றும் விதைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உயிரையே பறிக்கும் சையனைடிற்கு இணையான கெமிக்கல் ஒன்று உள்ளது.

பச்சை பால் பச்சை பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பச்சை பாலில் மிகவும் ஆபத்தான ஈ-கோலை உள்ளது. இந்த ஈ-கோலை உடலினுள் சென்றால், அது உயிரையே பறித்துவிடும்.

நட்சத்திர பழம் (Star Fruit) சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு நட்சத்திர பழம் மிகவும் ஆபத்தான ஒன்று. இதில் உள்ள நியூரோடாக்ஸின்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.

07 1444198540 1 cashewnuts

Related posts

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழ விதைகளை எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் ஆச்சரிய நன்மைகள்..!!

nathan

பச்சை மிளகாயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan

டயட்டில் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடா மரணம் நிச்சயம்!

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தமல்லியில் இத்தனை மருத்துவ குணங்களா?

nathan

mosambi juice in tamil – மோசம்பி ஜூஸ்

nathan