25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sesameseeds 15 1515995559
ஆரோக்கிய உணவு

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

அன்றாட சமையலில் சேர்த்து வரும் மிகச்சிறிய அளவிலான விதை தான் எள். இந்த எள்ளு வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும். இந்த எள்ளு ஆசியாவில் உணவுப் பொருட்களின் மேல் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. சரி, நாம் உணவில் சேர்த்து வரும் எள்ளு நம் உடலுக்கு நல்லதா? ஆம், எள்ளு விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

இந்த சிறிய விதையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இது உலகிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த சிறிய எள்ளு விதைகளை லேசாக வறுத்து உணவில் சேர்த்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் சுவையாக இருக்கும். இதனை பச்சையாக அப்படியே கூட சாப்பிடலாம்.

கருப்பு நிற எள்ளு விதைகளை விட வெள்ளை நிற எள்ளு விதையில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆனால் வெள்ளை நிற எள்ளு விதைகளை விட, கருப்பு நிற எள்ளு விதை நல்ல நறுமணத்துடன் இருக்கும்.மேலும் கருப்பு விதையில் தான் வெள்ளை எள்ளு விதையை விட 60% அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது.

எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெயில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஃப்ளேவோனாய்டு பீனாலிக் ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது இந்த எள்ளு விதையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

அதிக புரோட்டீன் எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள். அதற்கு இந்த எள்ளு விதைகளை சாலட்டுகள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்களின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் எள்ளு விதையில் மக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆய்வுகளில் எள்ளு விதை அல்லது எள்ளு எண்ணெய் சர்க்கரை நோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது ஹைப்பர் சென்சிடிவ் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா குளுக்கோஸை மேம்படுத்தவும் செய்யும்.

இரத்த அழுத்தம் எள்ளு விதை மற்றும் சர்க்கரை நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த எள்ளு விதைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதும் தெரிய வந்தது. ஏனெனில் எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் முக்கிய சத்தாகும்.

கொலஸ்ட்ரால் எள்ளு விதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள்ளு விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது.

செரிமானம் எள்ளு விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் எள்ளு விதைகளை அன்றாடம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும்.

ஆரோக்கியமான சருமம் எள்ளு விதைகளில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அளித்து, பாதிக்கப்பட்ட சரும திசுக்களை புதுப்பிக்க உதவும். எனவே உங்கள் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், எள்ளு விதைகளை அல்லது எள்ளு எண்ணெய்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் சரும புற்றுநோய் வருவது குறையும்.

இதய ஆரோக்கியம் எள்ளு விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளான சீசேமோல், பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

புற்றுநோய் எள்ளு விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் எள்ளு விதைகள் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் மன அமைதியை அதிகரிக்கும் வைட்டமின்களான தியாமின் மற்றும் ட்ரிப்டோபேன் போன்றவை செரடோனின் உற்பத்திக்கு உதவி, உடல் வலி, மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளித்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

இரத்த சோகை வெள்ளை நிற எள்ளு விதையை விட கருப்பு நிற எள்ளு விதையில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இரும்பச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபட தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுங்கள்.

டி.என்.ஏ பாதிப்பு ஆய்வு ஒன்றில் எள்ளு விதைகளில் உள்ள சீசேமோல் என்னும் உட்பொருள், கதிர்வீச்சுக்களால் ஏற்படும் டி.என்.ஏ பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் தவறாமல் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆர்த்ரிடிஸ் தற்போது நிறைய பேர் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இவர்கள் தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான காப்பர், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து எலும்புகள், முட்டுகள் மற்றும் இரத்த நாளங்களை வலிமைப்படுத்தும்.

கல்லீரல் ஆரோக்கியம் மது அருந்தும் பழக்கம் இருப்போருக்கு கல்லீரல் வேகமாக பாதிப்படையும். இத்தகையவர்கள் தினமும் எள்ளு விதைகயை சாப்பிட்டு வந்தால், ஆல்கஹாலால் கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.

சுருக்கங்கள் எள்ளு விதைகள் சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தையும், சருமத்தில் கருமை ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே இளமையை தக்க வைக்க நினைப்பவர்கள், தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுங்கள்.

எலும்பு ஆரோக்கியம் ஒரு கையளவு எள்ளு விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளையாவது சாப்பிடுங்கள்.

எலும்பு ஆரோக்கியம் ஒரு கையளவு எள்ளு விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளையாவது சாப்பிடுங்கள்.

கண் ஆரோக்கியம் பாரம்பரிய சீன மருத்துவத்தின் படி, கல்லீரல் மற்றும் கண்களுக்கு சம்பந்தம் உள்ளது. கண்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கல்லீரல் இரத்தத்தை அனுப்பி உறுதுணையாக உள்ளது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள், தினமும் கருப்பு எள்ளு விதைகளை சாப்பிடுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்

வாய் ஆரோக்கியம் ஆயுர்வேதத்தின் படி, வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும் ஓர் வழி தான் ஆயில் புல்லிங். அதிலும் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பல் சொத்தை குறைந்து, வாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

சுவாச மண்டல ஆரோக்கியம் எள்ளு விதைகளில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்க உதவும். எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எள்ளு விதைகளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து மெதுவாக குணமாகலாம்.

ஆரோக்கியமான தலைமுடி எள்ளு விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெயால் தலைமுடியைப் பராமரிப்பதுடன், தினமும் எள்ளு விதைகளை உட்கொண்டு வரவும் வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான தலைமுடியைப் பெறலாம்.

sesameseeds 15 1515995559

Related posts

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லதா?

nathan

வெள்ளை சாதம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடா மரணம் நிச்சயம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

வாழை, பப்பாளி

nathan

உணவு நல்லது வேண்டும்!

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சோம்பேறித்தனம் வருமா? உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா…பொய்யா?

nathan