27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
20180115 141724
ஆரோக்கியம் குறிப்புகள்

பாத்ரூம் கற்களின் கறையை நீக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

வீடு சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, கழிவுகளை நீக்கும் பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே பல நோய் கிருமிகள் வீட்டில் பெருக காரணமாகிவிடும்.

முக்கியமாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இவர்களுக்கு தான் எளிதில் நோய் கிருமி தொற்றுகள் விரைவாக பரவும். மேலும், சொந்தபந்தங்கள், நண்பர்கள் வீட்டுக்கு வரும் போது பாத்ரூம் அசுத்தமாக இருப்பது முகம்சுளிக்க வைத்துவிடும்.

எனவே, பாத்ரூம் டைல்ஸ் மிகவும் அழுக்காக இருக்கும் நபர்கள் ஒரே நிமிடத்தில் அந்த கறையை போக்க இதை யூஸ் செய்தால் போதும்…

தேவையான பொருட்கள்!

* ஒயிட் வினீகர் – ஒரு கப்.

* லிக்கியூட் சோப் – ஒரு கப்.

* துடைக்கும் துணி – ஒன்று

* ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று.

செயற்முறை | ஸ்டெப் #1
முதலில் வினிகரை மூன்று நிமிடங்கள் சூடு செய்துக் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

செயற்முறை | ஸ்டெப் #2
சூடு செய்த ஒரு கப் வினிகருடன், ஒரு கப் லிக்கியூட் சோப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வினிகர் மற்றும் லிக்கியூட் சோப் இரண்டையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.

செயற்முறை | ஸ்டெப் #3
இந்த வினிகர், லிக்கியூட் சோப் மிக்ஸ்-ஐ பாத்ரூம் டைல்ஸ்-ல் கறைப்படிந்துள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள்.

செயற்முறை | ஸ்டெப் #4
ஒரு நிமிடம் களைத்து துடைக்குக்ம் துணியை வைத்து துடைத்தால் போதுமானது. கறை முற்றிலுமாக நீங்கிவிடும்.20180115 141724

Related posts

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

nathan

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

நம்ப முடியலையே..ஆண்களின் முத்தங்கள் அவர்களைப் பற்றி கூறும் ரகசியங்கள்

nathan

ஏழே நாட்களில் உடலை சுத்தம் செய்ய சில சிறப்பான வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

nathan

அதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : பெற்றோர்களே கவனம்

nathan

வெந்நீரே… வெந்நீரே..

nathan

தெரிந்துகொள்வோமா? ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா?

nathan