29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ilk
மருத்துவ குறிப்பு

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கனும் தெரியுமா!இத படிங்க!

கர்ப்ப காலத்தில் கர்பிணிப் பெண்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உங்களது வயிற்றில் வளரும் அந்த சின்னஞ்சிறு கருவிற்கு எந்த துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது முக்கிய கடமையல்லவா… நீங்கள் நிச்சயமாக கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் எந்தெந்த உணவுகள் நல்லது.. எந்தெந்த உணவுகள் தீங்கு விளைவிக்கும் என்பது பற்றிய அடிப்படை விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் பற்றி காணலாம்

1. தண்ணீர் நாம் தினமும் குடிப்பது தான் தண்ணீர் என்றாலும் கூட இதனை கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான அளவு குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்பமாக இருக்கும் போது உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.மேலும் சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது. நீங்கள் கண்டிப்பாக தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

2. எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு உங்களுக்கு புத்துணர்வை அளிப்பதில் மிகச்சிறந்தது. இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கியமாக பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் சி ஆனது உங்களது உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவியாக உள்ளது. மேலும் இந்த எலுமிச்சை சாறு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.

3. இளநீர் இளநீர் நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இளநீரில் அருந்துவதால் எண்ணிலடங்காத நன்மைகள் உண்டாகின்றன. இதில் பொட்டாசியம், குளோரைடுகள் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. மேலும் இது செரிமானமாக கூடிய நார்ச்சத்துகள், கால்சியம், மெக்கனீசு, விட்டமின் சி போன்றவற்றை கொண்டுள்ளது. இது உங்களது உடல் நீரில்லாமல் வறட்சியடைவதை தடுக்கிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் பாதுக்காக்கிறது.

4. மோர் பால் பொருளான இந்த மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இது உங்களது கால்சியம் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் குழந்தையின் எலும்புகள் வழுவாக மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக வெயில் காலத்தின் கடுமையில் இருந்து விடுபட கர்பிணி பெண்கள் இந்த மோரை பருக வேண்டியது அவசியமாகும்

5. கேரட் ஜூஸ் கேரட் ஜூஸை கர்ப்ப காலத்தில் குடிப்பது மிகமிக நல்லது… இது உங்களது உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடியது உடல் சோர்வை போக்கும்.

6. ஆரஞ்ச் ஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். இதில் அதிகளவு விட்டமின் சி அடங்கியுள்ளது. நீங்கள் பிரஸ் ஆன ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது

7. ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் நல்ல சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆகும். ஆப்பிள் உங்களது உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள்.

8. ஹேர்பல் டீ உங்களது நாளை ஒரு ஹேர்பல் டீ உடன் ஆரம்பிக்கலாம்… பல ஹேர்பல் டீக்களில் காபின் இருக்காது.. காபின் கருச்சிதைவுக்கு காரணமாக அமையும். எனவே இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ரோய்போஸ் (Rooibos) எனப்படும் ஹேர்பல் டீ ஆனது உங்களுக்கு மிகவும் நல்லது. இதில் காபின் இருக்காது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிசன்கள் உள்ளது.

9. காய்கறிகள் உங்களது ஊட்டச்சத்து தேவையை காய்கறிகளை தவிர வேறு எதனாலும் ஈடுகட்ட முடியாது. ப்ரோகோலி, முட்டைக்கோஸ் போன்ற ஜூஸ் வகைகளை நீங்கள் பருகலாம். போலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

10. வெள்ளரி வெள்ளரிக்காய் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. மேலும் இது சுவையானதும் கூட.. எனவே நீங்கள் வெள்ளரிக்காய் ஜூஸை பருகுவது மிகவும் சிறந்ததாகும்.

11. புதினா டீ கர்ப்பிணி பெண்களுக்கு புதினா டீ மிகவும் சிறந்தது. இது கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் உடல் சோர்வை போக்க உதவுகிறது

12. பால் கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். தினமும் இரவு உறங்கும் முன்னர் பால் அருந்துவதால் நன்றாக தூக்கம் வரும். மேலும் பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது.

13. சியா விதை நீர் ஒரு பாத்திரத்தில் சியா விதைகளை போட்டு அதனை நன்றாக 10 நிமிடங்கள் ஊற வைத்து அந்த நீரை பருகி வந்தால் கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்திற்கு இது மிகவும் நல்லதாகும்

14. பன்னீர் புரோட்டீன் அதிகம் நிறைந்த சைவ உணவுகளில் ஒன்று தான் பன்னீர். இதில் புரோட்டீன் மட்டுமின்றி, கால்சியமும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே கர்ப்பிணிகள் பன்னீரை அவ்வப்போது எடுத்து வருவது நல்லது

15. பச்சை காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளில் கலோரிகள் சுத்தமாக இல்லாததால், அச்சமின்றி கர்ப்பிணிகள் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேல், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

16. சிவப்பு காராமணி காராமணியில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுவும் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம்.

17. தயிர் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால், உணவில் தயிரை அதிகம் சேர்த்து வாருங்கள்.

18. மீல் மேக்கர் மீல் மேக்கரில் புரோட்டீன் அதிகம் இருப்பதுடன், வைட்டமின் டி-யும் நிறைந்திருப்பதால், இதனை வாரம் ஒருமுறை எடுத்து வருவது நல்லது

19. பீன்ஸ் பீன்ஸில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகையான பீன்ஸிலும் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் எனர்ஜியைக் கொடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தை சீராக வைக்கும்

20. பருப்பு வகைகள் பருப்புக்களை அன்றாடம் கர்ப்பிணிகள் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய அளவு புரோட்டீனானது கிடைக்கும். எனவே உணவில் பருப்பு வகைகளை மறக்காமல் சேர்த்து வாருங்கள்.

21. செரில் செரிலில் பழங்கள், பால் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால், கால்சியம், வைட்டமின் டி மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய DHA போன்றவை அதிக அளவில் கிடைக்கும்.

22. தேங்காய் தேங்காயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். மேலும் இந்திய மூட நம்பிக்கைகளின் படி கர்ப்பிணிகள் தேங்காய் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்குமாம்.

23. நட்ஸ் நட்ஸ்களில் பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வைட்டமின் ஈ கிடைக்கும். எனவே இதனை ஸ்நாக்ஸாக எடுத்து வருவது மிகவும் நல்லது.

4. வாழைப்பழம் கர்ப்பிணிகள் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைப்பதுடன், உடலில் நார்ச்சத்துக்களின் அளவு அதிகரித்து, குடலியக்கம் சீராக செயல்படும்.ilk

Related posts

ஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி?

nathan

மூலிகை பொடிகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்..!!

nathan

இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா…? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி

nathan

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்

nathan

மூக்கில் அடிக்கடி இரத்தம் வழிகிறதா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

மருத்துவ செய்தி 8 மருத்துவ குறிப்புகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் 9 மாற்றங்கள்!

nathan