27.3 C
Chennai
Sunday, May 19, 2024
30 1498801790 13 1444740591 tongue2
மருத்துவ குறிப்பு

உங்கள் கவனத்துக்கு உங்க உடல்நலம் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது தெரியுமா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அது போல நமது உடலின் ஆரோக்கியத்தை நமது நாக்கின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாக்கில் தோன்றும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை அறிய முடிகிறது. அது எப்படி என்று இந்த பகுதியில் காணலாம்.

வெள்ளை திட்டுக்கள் வாய் புண், ஒரு இயற்கையாக வளரும் பூஞ்சை வளர்ச்சி. நோயெதிர்பு மண்டலம் பாதிப்டையும் போது அடிக்கடி தோன்றும். குழந்தைகள், புற்றுநோயாளிகள், எச்.ஐ.வி மற்றும் பிற நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் வாய் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வாய் புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆண்டிபயோடிக்குகள் கூட இந்த தாக்குதலுக்கு வழிவகுக்கலாம்.

வெண்ணெய் புள்ளிகள் – நாக்கில் சிவப்பு சூழ்ந்த வெள்ளைப்புள்ளி, வெண்ணெய் புள்ளியாக இருக்கலாம். வெண்படல்- வெள்ளை அல்லது சாம்பல் நிற படலம் வெண்படல் என்று அழைக்கப்படுகிறது.

கரும்படலம் ஈஸ்ட் இன்பெக்சன், புற்றுநோய் சிகிச்சைகள், சர்க்கரை நோய், அல்லது மோசமான வாய் சுகாதாரம். ஒரு இடத்தில் கருமை படர்ந்தால் நாக்கு முழுவதும் கருமை படரும் வாய்ப்புகள் உண்டு. மது, புகையிலை, ஆண்டிபயோடிக் அதிகமாக உபயோகிக்கும் போது சிறிய கருப்பு புள்ளிகள் நாக்கு முழுவதும் உருவாகும். இது ஒரும் ஈஸ்ட் இன்பெக்சன் இது நாக்கு முழுவதும் அதிகமாவதால், கரும்படலம் உருவாகிறது.

வெள்ளையான வட்டம் ஃபோலிக் அமிலம், பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டினால் நாக்கு சிவத்தல் அல்லது புவியியல் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் அழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பின் போது இந்த படலத்தை சுற்றி வெள்ளையான வட்டம் இருக்கும். மேலும் அதன் இருப்பிடம் ஒவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் மாறும்.

சளி சவ்வுகளை பாதிக்கும் வாய்வழி லிச்சென் பிளானஸ் என்பது ஒரு நீண்டகால அழற்சி நிலை. இது வாய்க்குள் இருக்கும் சளி சவ்வுகளை பாதிக்கிறது. இது வெள்ளை, சிவப்பு, வீங்கிய திசுக்கள் அல்லது திறந்த புண்களாக இருக்கலாம். இந்த புண்கள் எரிச்சலை உண்டு செய்யலாம், வலி அல்லது பிற கோளாறுகளை உண்டு செய்யலாம்.

நாக்குகளில் அழுத்தம் பற்கள் நாக்குக்குள் அழுத்துதல் இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும்
30 1498801790 13 1444740591 tongue2

Related posts

சர்க்கரை நோயா? இந்த வேப்பம் டீ குடிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மூலம் நோய்க்கு வீட்டிலேயே செய்யும் இயற்கை மருந்து…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் எப்படி தயாராக இருக்க வேண்டும் தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல், கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

nathan

ஆண்களே என்ன செஞ்சாலும் உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

உங்களுக்கு தெரியுமா கீழாநெல்லியின் முழு மருத்துவப் பயன்களும் இவை தான்….

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளை

nathan

கொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..!

nathan