மனிதர்களின் பிணிகளை தீர்க்க வல்ல மூலிகைகளை நமது வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். இந்த மூலிகை தாவரங்களில் இருந்து கிடைக்ககூடிய உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்ந்துக்கொண்டு வந்தாலே, தொண்ணூறு சதவீத நோய்களை விரட்டியடிக்க முடியும். இப்படியான வளமான வாழ்நாட்களை வழங்கும் ஆறு மூலிகை தாவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
செம்பருத்தி
கூந்தல் வளர்ச்சி பெறும் மற்றும் கருமை அடையும். மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். இருதய நோய் உங்களை நெருங்காது, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
குப்பைமேனி
மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், மூட்டு வலி குணமாகும்.
கற்றாழை
சரும பிரச்சினைகளுக்கு கற்றாழை மிகச் சிறந்த தீர்வு. கற்றாழை சாறு பருகி வந்தால் தாம்பத்தியம் மேம்படும், கண் பார்வை தெளிவாகும்.
பிரண்டை
பிரண்டையை தொக்கு, சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு, ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை ஆரோக்கியம் அடையும். மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். எலும்புகளுக்கு உறுதி.
நொச்சி
காய்ச்சல், தலைவலி, பீனிசம், நீர்க்கட்டு பிரச்சினைகளை விரட்டும் வல்லமை நொச்சிக் கீரைக்கு உண்டு.
மஞ்சள்
அடிபட்ட வலி, வயிற்று வலிக்கு மஞ்சள் சிறந்த தீர்வு. பெண்களுக்கு முக அழகு, சரும பிரச்சினைகள் தீரும். மஞ்சள் ஒரு ஆகச் சிறந்த கிரிமி நாசினி என்பதால் முழு உடலும் ஆரோக்கியம் பெறும்.