22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
2014 09 apple 1
எடை குறைய

இந்த டயட் அட்டவணையை மட்டும் பின்பற்றுங்க 7 நாட்களில் 10 கிலோ குறைக்கலாம்?

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது.
இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளே முக்கிய காரணமாகும் .

மேலும் சிலர் டயட் என்ற பெயரில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதனால் குண்டாகிறார்கள்.உடல் பருமன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏழு நாட்கள் மட்டும் உங்களின் அன்றாட உணவு முறைகளை மாற்றி, ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், 7 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்.

ஏழு நாட்கள் டயட் முறை
உங்கள் டயட்டின் முதல் நாட்களில் இருந்து அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் வரை இதனை பின்பற்றவும்.காலையில் இரண்டு ஆப்பிள், மதியம் 3 ஆப்பிள். மதியம் சாப்பிடும் ஆப்பிளின் அளவு பெரியதாக இருக்க வேண்டும். இதோடு சேர்த்து உங்களுக்கு கலோரி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு முட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆப்பிளை சின்ன வெங்காயம் சேர்த்து சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம். இதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.இரவு 2 ஆப்பிள் சாப்பிடுங்கள்.இந்த ஏழு நாட்களும் தொடர்ந்து இந்த டயட் முறைகளை பின்பற்றி வந்தால், ஏழு நாட்களிலேயே உங்களின் 10 கிலோ எடையை எளிமையாக குறைக்க முடியும்.

குறிப்பு
நீங்கள் இந்த ஏழு நாட்களும் டயட்டில் இருக்கும் போது, உப்பு மற்றும் இனிப்பை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.ஒரே மாதத்தில் 10 கிலோ உடல் எடையைக் குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ!

தேவையான பொருட்கள்
சுடுநீர் – 1 கப்,சீரகப் பொடி – 1 டீஸ்பூன்,பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி பவுடர் – 1/2 டீஸ்பூன்,எலுமிச்சை தோல் – 2 துண்டுகள்,தேன் – சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் கொதிக்கும் சுடுநீரில் தேனைத் தவிர, சீரகப்பொடி, பட்டைத் தூள், இஞ்சி பவுடர், எலுமிச்சை தோல் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.பின் ஊறவைத்த அனைத்து பொருட்களின் சாறு முழுவதும் நீரில் நன்றாக இறங்கி, பானம் சற்று குளிர்ந்ததும், அதில் தேன் சேர்த்து கலந்து வடிகட்டினால், பானம் தயார்.

பருகும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.2014 09 apple

Related posts

எடை இழக்க சிறந்த 9 பயனுள்ள வழிகள்

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

nathan

தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!

nathan

கொழுப்பை குறைக்கும் கொள்ளு துவையல்

nathan

அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் சிக்கென்ற உடலைப் பெற உதவும்..

nathan

உடல் எடையை குறைக்க அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள்!அற்புதமான எளிய தீர்வு

nathan

பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?

nathan

இது நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய மேட்டருங்க! பிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..

nathan