28.5 C
Chennai
Sunday, May 18, 2025
625.500.560.350.160.300.053.800.900.160.90 17
தலைமுடி சிகிச்சை

எலுமிச்சையோட இதுல ஏதாவது ஒன்னு சேர்த்து தேய்ங்க… வழுக்கையே விழாது… சூப்பர் டிப்ஸ்..

அனைவருக்குமே தனக்கு அழகான நீளமான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கூந்தல் உதிர்வதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். கூந்தல் உதிர்வது சாதாரணம் தான் என்றாலும் கூட, அளவுக்கு அதிகமான முடி உதிர்வு என்பது உங்களது கூந்தலின் அடர்த்தியை குறைத்துவிடும்.

கூந்தல் உதிர்வு பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது என்பதையே நீங்கள் உங்களது கூந்தலில் பாதியை இழந்த பிறகு தான் உணர்வீர்கள்.. அதன் பின்னர் விலை உயர்ந்த எண்ணெய்கள், ஷாம்புகள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை…
முடி உதிரும் காலத்திலேயே சுதாகரித்துக் கொண்டு, மிக எளிமையான இந்த முறைகளை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்
ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறை 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் கலந்து கொள்ளவும். இந்த மிக்ஸ் செய்த எண்ணெய்யை கொண்டு, முடியின் வேர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதனால் உங்களது முடி உதிர்வை தடுக்கலாம்.

எலுமிச்சை மற்றும் விளக்கெண்ணெய்
2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை அலசுங்கள். இதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் தலைமுடி உதிர்தல் பிரச்சனையானது விட்டால் போதும் என்று ஓடிப்போய்விடும்

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்
பூண்டை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். மசித்த பூண்டுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, அதனுடன் இரண்டும் டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு கூந்தலின் வேர்க்கால்களை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை முப்பது நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் தலைமுடியை அலசுங்கள். இதனை மாதத்திற்கு ஒருமுறை செய்தாலே உங்களது முடி உதிர்தல் பிரச்சனை தீரும்.

எலுமிச்சை மற்றும் கற்றாழை ஜெல்
2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நன்றாக முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
இருபது நிமிடங்கள் இதனை அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை அலசிக் கொள்ளுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு தடவைகள் செய்வதன் மூலமாக உங்களது தலைமுடி உதிர்வு பிரச்சனை தீரும்.

எலுமிச்சை மற்றும் இளநீர்
இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறும் மூன்று டீஸ்பூன் அளவிற்கு இளநீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பின்னர், இந்த எலுமிச்சை, இளநீர் கலவையை கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் கழித்து கூந்தலை அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் அலச வேண்டும். இந்த எலுமிச்சை மற்றும் இளநீர் கலவையானது உங்களது கூந்தலை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வு குறையும்.

எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய்
இரண்டு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் எண்ணெய்யுடன் கலந்து கொள்ள வேண்டும். இதனை தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும், இதனால் முடி உதிர்வு பிரச்சனையானது குறையும்.

எலுமிச்சை மற்றும் வெங்காயச்சாறு
இரண்டு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காய சாறை எடுத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு கலவையும் தலைமுடியில் போட்டு நன்றாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவினால் கழுவ வேண்டும். இதனை மாதத்தில் ஒரு முறை செய்வதால் முடி உதிர்வு நிறுத்தப்படும்.

எலுமிச்சை மற்றும் முட்டை
இரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும். இந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் மையில்ட் ஷாம்புவை கொண்டு வாஷ் செய்ய வேண்டும். இதனால் விரைவில் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.

எலுமிச்சை மற்றும் தயிர்
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்துக் கொண்டு அதில் 1 டீஸ்பூன் அளவு யோகார்ட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை தலையில் அப்ளை செய்வதற்கு முன்னர் தலையை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து உங்களது தினசரி ஷாம்புவை கொண்டு கூந்தலை அலசிக்கொள்ள வேண்டும்.

மருதாணி மற்றும் எலுமிச்சை
மருதாணியை வைத்து தலைக்கு பேக் மாதிரி போடுவதற்கு, முதலில் மருதாணி பௌடரில் 2-3 டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்களது தலைக்கு பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து உங்களது தலையை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கண்கூடாக தெரியும்.625.500.560.350.160.300.053.800.900.160.90 17

Related posts

முடி 2 இன்ச் நீளமாக வளரச் செய்யும் சில்வர் ஃபாயில் மாஸ்க்!! ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan

நரை முடியை கறுப்பாக்க – grey hair a thing the past after

nathan

கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்

nathan

தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்

nathan

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika

ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan