26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1513251884 10
ஆரோக்கிய உணவு

இந்த 10 அற்புதமான ஜூஸ்களை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?

உடல் எடையை குறைத்தல் என்பது லேசான காரியம் கிடையாது. நல்ல தீர்வு கிடைக்கும் வரை போராட வேண்டியிருக்கும். இதற்குனு உங்கள் நேரமும் ஆற்றலும் கொஞ்சம் தேவைப்பட வேண்டியிருக்கும்.

 நீங்கள் என்ன தான் கடினமான உடற்பயிற்சி செய்தாலும் நிறைய டயட் டிப்ஸ்களை பின்பற்றினாலும் சில நேரங்களில் உங்கள் உடல் எடையில் துளியளவும் மாற்றம் கிடைக்காது.

எனவே இதற்காகத்தான் நாங்கள் ஜூஸ் டயட்டை பின்பற்ற சொல்கிறோம்.ஆமாங்க ஜூஸ் நமது உடல் எடையை குறைப்பதில் சிறந்த பங்காற்றுகிறது. இது நமது உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நச்சுக்களை வெளியேற்றி எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் கிட்டத்தட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய ஜூஸ் முறைகள் விரைவான பலன்களை கொடுக்கின்றன.

இந்த நச்சுக்களை வெளியேற்றும் ஜூஸை குடிப்பதால் சீரண சக்தி அதிகமாகிறது, கொலஸ்ட்ரால் குறைகிறது, இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நல்ல உடல் எடையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த ப்ரஷ் ஜூஸில் நிறைய மினிரல்கள், விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இங்கே 10 அற்புதமான ஜூஸ்களை பற்றியும் அவைகள் எப்படி எடையை குறைக்க பயன்படுகிறது என்பதை பற்றியும் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

வெள்ளரிக்காய் மற்றும் செலரி ஜூஸ் நீங்கள் ஒரு நடுநிலையான டயட்டை மேற்கொள்ள விரும்பினால் அதற்கு செலரி மற்றும் வெள்ளரிக்காய் காம்பினேஷன் சிறந்தது. வெள்ளரிக்காயில் நிறைய நீர்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உங்கள் வயிறு நிறைந்த எண்ணம் உருவாகும். நீண்ட நேரம் பசியை தாக்கு பிடிக்க முடியும். இதனுடன் செலரி சேர்க்கும் போது இது குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் உடல் எடை குறைக்க எளிதாக முடிகிறது.

தர்பூசணி மற்றும் புதினா ஜூஸ் புதினா உணவுகளின் சுவையை மட்டும் நீடிப்பதில்லை மற்றும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. தர்பூசணியில் நிறைய அமினோ அமிலங்கள் இருப்பதால் கொழும்புகளை கரைத்து விடுகிறது. இந்த இரண்டும் சேர்ந்த கலவை அதிக நீர்ச்சத்துடன் கலோரிகள் குறைந்து உடல் எடையை குறைக்கிறது.

செய்முறை தர்பூசணியை கழுவி நன்றாக வெட்டி கொள்ளவும். புதினா இலைகளையும் நறுக்கி கொள்ளவும் பிறகு இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி சாரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் தயாரிக்கவும்.

முட்டைகோஸ் ஜூஸ் முட்டைகோஸ் காய்கறி நிறைய நார்ச்சத்து நிறைந்தது. இவை வயிறு சம்பந்தமான பிரச்சினைகளான வயிறு உப்புசம், சீரணமின்மை போன்றவற்றை சரி செய்கிறது. மேலு‌ம் முட்டைகோஸ் ஜூஸ் உடல் எடையை வேகமாக குறைந்து வயிறு நிரம்பிய பீலிங்யை தருகிறது.

ஆரஞ்சு ஜூஸ் ஆரஞ்சு ஜூஸ் ஒரு ஆரோக்கியமான ஜூஸாக இருப்பதோடு கலோரிகள் குறைந்தது. நீங்கள் ஆரஞ்சு செயற்கை பானங்களை கூட எடுத்து கொள்ளலாம். ஆரஞ்சில் அதிகமான விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செய்முறை ஆரஞ்சு பழத்தை எடுத்து நன்றாக கழுவி தோலுரித்து கொள்ளவும். பிறகு விதைகளை நீக்கி விடவும். பிறகு மிக்ஸி சாரில் போட்டு கருப்பு உப்பு போட்டு ஜூஸ் தயாரித்து குடிக்கவும்.

அன்னாசி பழம் ஜூஸ் அன்னாசி பழம் தொப்பையை குறைக்க பயன்படுகிறது. இதிலுள்ள புரோமெலைன் என்ற என்ஜைம் வயிற்றில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.

செய்முறை அன்னாசி பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும். பிறகு 1/2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். இதை தொடர்ந்து பருகி வந்தால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்

மாதுளை ஜூஸ் மாதுளையில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினோல்ஸ் மற்றும் லினோலெனிக் அமிலம் உள்ளது. இந்த சத்துக்கள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.

செய்முறை மாதுளை விதைகளை எடுத்து மிக்ஸி சாரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் தயாரித்து வடிகட்டி கொள்ளவும். பிறகு இதை பருகினால் நல்ல பலனை காணலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் பருகினால் சீரண சக்தி மேம்படுவதோடு உடலின் மெட்டா பாலிசமும் அதிகரிக்கிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்.

செய்முறை நெல்லிக்காயின் விதையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு வடிகட்டி அதை குடிக்க வேண்டும்.

காரட் மற்றும் தக்காளி ஜூஸ் காரட் குறைந்த கலோரிகள் கொண்டது. இதில் விட்டமின் ஏ மற்றும் நிறைய நார்ச்சத்துகள் அடங்கியுள்ளது. தக்காளி மெட்டா பாலிசத்தை ஓழுங்குபடுத்துகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

செய்முறை காய்கறிகளை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளவும் பிறகு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி குடிக்கவும்.

பாகற்காய் ஜூஸ் பாகற்காய் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த பொருளாக பயன்படுகிறது. கலோரிகள் குறைந்தது. பாகற்காய் கல்லீரலில் உள்ள பித்த நீரை அதிகமாக சுரக்க செய்து மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழும்புகளை கரைக்கிறது.

செய்முறை பாகற்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளவும். இது பாகற்காயின் கசப்பு தன்மையை குறைக்கும். நன்றாக அரைத்து வடிகட்டி ஜூஸை குடிக்கவும்.

சுரைக்காய் ஜூஸ் இதுவும் உடல் எடையை குறைக்க பயன்படும் சிறந்த ஒன்றாகும். குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாத ஒன்றாக சுரைக்காய் உள்ளது. மேலும் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

செய்முறை சுரைக்காயை தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும் இதனுடன் டேஸ்ட்டுக்கு கொஞ்சம் இஞ்சி மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து ஜூஸ் தயாரித்து பருகவும்.

14 1513251884 10

Related posts

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்

nathan

தயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தின் பயன்கள்!

nathan

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பருவம் அடைந்த பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

nathan

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்

nathan

உடல் நலனை பேணும் காய்கறிகள்

nathan

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan