தேவையான பொருட்கள் :நேந்திரம் பழம் – 1
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1 துண்டு
சீரகம் – அரை ஸ்பூன்
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1ஸ்பூன்தாளிக்க :
கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை
செய்முறை :
• தயிரை கட்டி இல்லாமல் நன்றாக கடைந்து கொள்ளவும்.
• நேந்திரம் பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய பழத்தை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். (5 நிமிடம் வேக வைத்தால் போதுமானது). பின்னர் வேந்த பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.
• தேங்காய், சீரகத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து, அரைத்த தேங்காயை பழ கலவையில் கொட்டி நன்றாக கிளறி விடவும். (2 நிமிடம் வைத்தால் போதும்)
• அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆறவிடவும்.
• ஆறிய பழ கலவையில் கடைந்து வைத்துள்ள தயிரை ஊற்றி நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிரில் கொட்டி கிளறவும்.
• சுவையான வாழைப்பழ மோர் குழம்பு ரெடி.