25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
201707141726571293 tips to get tight muscles in under arms SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு இந்த இடத்தில் சதை தொங்குகிறதா?… அதை சரிசெய்ய என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்

நம்முடைய உடலில் கொலாஜன் சக்தி குறைவாக இருந்தால் உடலில் உள்ள சதைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியில்லாமல் இருக்கும். இதற்கு மெருந்துகளோ சிகிச்சையோ எதுவும் தேவையில்லை.

சருமத்தில் கொலாஜன்களை அதிகரிக்கும் செய்யும் சில விஷயங்களைச் செய்தாலே போதும். கை, தொடைகளில் தொங்குகிற சதைகளை இறுக்கமானதாக மாற்ற முடியும்.

கீழ்கண்ட சில விஷயங்களை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள். பயன்கள் உங்களுக்கே தெரியும்…

2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்யை தசை தொங்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை ஒருவாரத்திற்கு 3-4 முறை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் முன் கைகளில் தடவி, ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.

பட்டர் ஃபுரூட் பழத்தை எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு கலந்து, கைகளில் உள்ள தொங்கும் தசைகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் மஞ்சள் தூளை, 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து, அதிக தசை உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து, நீரில் கழுவ வேண்டும்.

2 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை தசை தொங்கும் கைகளில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்துவிடுங்கள். இதை வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால் போதும். ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

டீஸ்பூன் கல் உப்பை நீர் கலந்து, கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.201707141726571293 tips to get tight muscles in under arms SECVPF

Related posts

பெண்களுக்கு இடுப்புவலி நீங்க அருமையான மருந்து இதோ..!

nathan

ஆரோக்கியத்திற்கு தீங்காகும் அழகு சாதனப் பொருட்கள்!

nathan

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற…

sangika

இதப்படிங்க பாஸ்!!! கொக்-கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா??

nathan

தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்

nathan

அதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : பெற்றோர்களே கவனம்

nathan

தொப்பையை கரைக்கும் ரஷ்யன் ட்விஸ்ட்

nathan

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் எப்படிபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

nathan