25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
10 29 1511948151
ஆரோக்கிய உணவு

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறி பழங்களை நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொள்கிறீர்களா அதேயளவு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இன்னொரு விஷயம் தானியங்கள் மற்றும் பயிறு வகைகள்.

இதில் எக்கச்சக்கமான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. உங்கள் உடலுக்கு தேவையான உடனடி எனர்ஜி கிடைத்திடும். இதைத்தவிர அதிலிருக்கும் ஏராளமான தாதுக்கள் உள்ளுருப்புகள் சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.

அதனை அப்படியே சாப்பிடுவதை விட அதனை முளைகட்டிய பயிறாக மாற்றிச் சாப்பிடுவதால் அதிலிருந்து நமக்கு இரட்டிப்பு பலன் கிடைத்திடும் என்றே சொல்லலாம். முளைகட்டிய பச்சை பயிறு சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முளைகட்டிய பயிறு : முளைகட்டிய பயிறுகளில் தான் ஏராளமான தாதுக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக இதில் விட்டமின் இ, பொட்டாசியம், இரும்பு, ஃபைட்டோகெமிக்கல்,ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ், பயோஃப்லேவனாய்ட்ஸ்,கீமோப்ரோடெக்டன்ஸ் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவை இருக்கிறது. இதைத் தவிர ஃபோலிக் ஆசிட்,ஜிங்க்,நியாசின்,ரிபோஃபிலின்,காப்பர் மற்றும் மக்னீசியம்.

இதயம் : நம் உடலில் இருக்கும் ஆரோக்கியமற்ற எல் டி எல் ஆக்ஸிடைசேசனை குறைத்திடும். இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுத்திடும். பச்சை பயிறில் உங்கள் ரத்த நாளங்களை சுத்தமாக்கு தன்மை அதிகமிருப்பதால் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்வது நலம்.

ப்ரோட்டீன் : இந்த முளைகட்டிய பச்சை பயிறில் எக்கச்சக்கமான ப்ரோட்டீன் இருக்கிறது. அதிலிருக்கும் ஆல்புமின் மற்றும் க்லோபுலின் ஆகியவை உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. அதோடு இதில் 85 சதவீதம் அமினோ அமிலமும் கிடைக்கிறது.

ரத்த அழுத்தம் : இதில் இருக்கும் பெப்டிடைஸ் ஆண்ட்டி ஹைப்பர்ஸ்டென்சிவ் துகள்கள் குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்திடும். இதனால் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் : இதிலிருக்கும் பாலிஃபினால்ஸ் மற்றும் oligosaccharides புற்றுநோயுடன் எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது. நம் உடலிலிருக்கும் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன். புற்றுநோய் தாக்கியிருந்தாலும் அதனை விரைந்து பரவாமல் தடுக்க உதவிடும்.

டைப்2 டயாபட்டீஸ் : பச்சை பயிறில் ஆண்ட்டி டயாப்பட்டிக் துகள்கள் இருக்கின்றன. இது உங்கள் உடலில் இருக்கக்கூடிய ரத்தச் சர்க்கரையளவை குறைத்திடும். அதோடு குளோக்ககான்,ட்ரிக்ளைசெரைட்ஸ்,ப்ளாஸ்மா சி ஆகியவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி : இதிலிருக்கும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ்கள் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் துகள்களாக பயன்படுதுகிறது. இது நம்மை தாக்கிடும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது. அதோடு செரிமானத்தை துரிதப்படுத்தி, நம் உடலுக்குத் தேவையான சத்துக்களை எடுக்க வழி வகுக்கிறது.

எடை குறைவு : பச்சைப்பயிறில் அதிகப்படியான ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைவான உணர்வைத் தரும். அதோடு இது நம் பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையற்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள தேவையிருக்காது.

மாதவிடாய் : மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் மன மாற்றங்களை கூட நம்மால் சமாளிக்க முடியும். பச்சைபயிரில் விட்டமின் பி,ஃபோலேட்,பி6 ஆகியவை கிடைக்கின்றன. இவை நம் ஹார்மோன்களை பேலன்ஸ் செய்திடும். அதனால் மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வயிற்று வலி,தலைவலி, சோர்வு ஆகியவற்றை தடுக்க உதவிடும்.

நச்சுக்கள் : நம் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை எல்லாம் அகற்றிட வேண்டியது மிகவும் அவசியமாகும். பச்சைப்பயிறு சாப்பிடுவதால் நம் உடலில் சேர்ந்திடும் நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கெமிக்கல்கள் அகற்றிட உதவிடும்.

கண் பார்வை : ஒரு கப் நிறைய முளைகட்டிய பச்சை பயிரில் 14 மில்லி கிராம் வரை விட்டமின் சி கிடைக்கிறது இது உங்களின் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. தினமும் மாலை சிற்றுண்டியாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆண்ட்டி ஏஜிங் : இதில் இருக்கும் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் ஆகியவை உங்களின் சரும நிறத்தை மேம்படுத்த உதவிடுகிறது. அதோடு இதில் இருக்கும் ஃபைட்டோஈஸ்ட்ரஜன் . இது உங்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கிடும்.

இரும்புச் சத்து : பச்சை பயிறில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களது தினசரி உணவில் பச்சை பயிரை சாப்பிட்டு வந்தால் நீங்கள் ரத்த சோகையிலிருந்து தப்பிக்கலாம்.

முடிப்பிரச்சனை : முடி தொடர்பான பிரச்சனைகள் எது இருந்தாலும் பச்சை பயிறு எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் தலையில் சீபம் உற்பத்தியை அதிகரித்து தலைமுடியை அதிகம் வறண்டு விடாமல் பாதுகாக்கும். இதனால் முடி உதிர்வது, பொடுகுப்பிரச்சனை ஆகியவை ஏற்படாது. சிலருக்கு பயோட்டின் குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வுப் பிரச்சனை இருக்கும். அவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

சமைக்கும் முறை : பயிறு வகைகளை முளைகட்ட வைப்பதற்கு முன்னால் சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஈரத்துணியில் அதனை போட்டு இறுக்கமாக கட்டி வைத்திடுங்கள். மறு நாள் காலையில் அது முளை விட்டிருக்கும். இதனை சமைக்கும் போது குறைந்த அளவிலான தண்ணீரில் மட்டுமே வேக வைக்க வேண்டும். அப்போது தான் அதிலிருக்கும் சத்துக்கள் அதிகமாக வீணாகாது.

10 29 1511948151

Related posts

இதை தினமும் சாப்பிடுங்க : கொலஸ்ட்ராலுக்கு சொல்லலாம் குட்பாய்…!

nathan

mudavattukal kilangu in tamil – முடவாட்டுக்கால் கிழங்கு சூப்…

nathan

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாதவைகள்!!!

nathan

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் – நலம் நல்லது – 4!

nathan

உடல் எடையைக் குறைக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிந்துகொள்வோமா? இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கோடையில் தாக்கும் ஆபத்தான வெப்ப மயக்கம் நோய்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி தொக்கு!!

nathan