26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1507980784 pcover 24 1464079199
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் சாப்பிட்டா ஒரே மாசத்துல ஹைட்டாகலாம்!!

ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம்.
சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் தகுந்த உயரத்தை ஒவ்வொருவருமே பராமரிக்கவேண்டியது அவசியம்.

குழந்தைகளின் உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டும் காரணமாக இருக்காது. உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும்

உயரத்தை அதிகரிக்கும் சுரப்பி :
நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் உயரத்தை அதிகரிக்கும் மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை (Human Growth Hormone -HGH) சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உயரமாக வளர கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாப்பிடவேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்.

நிம்மதியான தூக்கம் :
தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படும். அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, உயரமாக வளர, உடலுக்குப் போதிய ஓய்வு தேவை. அதிலும், வயதுக்கேற்ற தூக்கம் அவசியம். சிறு வயதினர் (0-12) தினமும் 8-11 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.

கால்சியம் : ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்குத் தேவை கால்சியம். பால்பொருள்கள், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன.

விட்டமின் டி : கால்சியம் சத்துகளை நம் உடல் கிரகித்துக்கொள்ளத் தேவையானது வைட்டமின் டி. அதேபோல, இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியக்கூடியது. சூரிய ஒளி உடலில் படுவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதாகக் கிடைக்கும்.

பீன்ஸ் : பீன்ஸில் அதிகப்படியான விட்டமின் மற்றும் ப்ரோட்டின் இருக்கிறது. உயரமாக வளர்வதற்கு இவை மிகவும் அவசியம். பீன்ஸில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மிகவும் துணை நிற்கின்றன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே உயரமாக வளர முடியும்.

பட்டாணி : பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். வைட்டமின் கே நிறைந்துள்ள பச்சை பட்டாணி எலும்புகளை வலுவடையச் செய்யும். ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ் (glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது.இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது. இதில் அதிகளவு ஃபைபர்,விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால் ஹார்மோன் வளர்சிக்கு உதவிடும்.

நூல்கோல் : நூல்கோலில் அதிகப்படியான விட்டமின்ஸ்,மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதோடு இது கலோரி குறைவானதும் கூட. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உயரமாக வளர்வதற்கான ஹார்மோன் தூண்டப்படும்.

பசும்பால் : பாக்கெட் பால் இல்லாது, தூய பசும்பாலில் கால்சியம் சத்து அதிகமாக கிடைத்திடும். எலும்புகளின் வளர்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது கால்சியம். எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் அதற்கு நம்முடைய எடையை தாங்கக்கூடிய சக்தி கிடைத்திடும். உயரமாக வளர்வதற்கு முக்கியத்தேவை இந்த கால்சியம் தான்

பழங்கள் : திராட்சை,பப்பாளி,மாம்பழம்,போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின், பொட்டாசியம், ஃப்லோலேட்ஸ் நிறைந்திருக்கிறது. இந்த சத்துக்கள் எல்லாம் நாம் உயரமாக வளர்வதற்கு துணை புரியும்.அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்க வேண்டும்.

வெல்லம்+பால் : தேவாமிர்தம் என்றே சொல்லலாம். பால் உயரத்தை அதிகரிக்க உதவிடும் முக்கியமான பொருள்களில் ஒன்று அவற்றுடன் வெல்லத்தை கலந்து குடித்து வந்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் வெல்லம் கலந்து குடிக்க வேண்டும்,மற்ற நேரங்களை விட காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அது மிகவும் நல்லது. அதிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்களை உடனேயே கிரகத்திக் கொள்ள முடியும்.

அஸ்வகந்தா : நம் உடலில் இருக்கும் ஹூயுமன் க்ரோத் ஹார்மோன்(HGH) வளர்வதற்கு முக்கிய காரணமாய் இருப்பது அஸ்வகந்தா. இது உயரத்தை அதிகரிப்பதற்கும் முக்கியப்பங்காற்றுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் அதன் ஆரோக்கியத்திற்கும் துணை நிற்கிறது. கறுப்பு எள்ளில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின் பி இருக்கிறது. அதோடு அதில் கால்சியமும் இருக்கிறது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பாதமில் கால்சியம்,மக்னீசியம்,பொட்டாசியம் அதோடு எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான இன்னபிற மினரல்ஸ்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பாலில் கலந்து சாப்பிட்டால் கண்டிப்பாக உங்களது உயரம் வளர்ந்திடும். ஒரு கிளாஸ் பாலில் ஒரு டீஸ்ப்பூன் அஸ்வகந்தா பவுடர்,பாதாம் பவுடர்,கறுப்பு எள் பவுடர்,ஒரு டீஸ்ப்பூன் தேன் எல்லாம் கலந்து குடித்து வாருங்கள்.

சோயா பீன்ஸ் : சோயாவில் இருக்கும் ப்ரோட்டீன் எலும்புகளின் வளர்ச்சிக்கும் திசுக்களின் பெருக்கத்திற்கும் அவசியமாகும். இதனை தினமும் எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுவாக இருக்கும். ஒரு நாளைக்கு 50 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

நட்ஸ் : ஸ்நாக்ஸ் வகைகளில் ஆரோக்கியமானது என இந்த நட்ஸை சொல்லலாம். இதிலிருக்கும் விட்டமின், மினரல்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கிறது. இதனால் நாம் உயரமாக வளர்வதற்கு நட்ஸ்கள் அவசியம் தேவை.

கீரை : ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் கீரைகள் கண்டிப்பாக இடம்பெறும். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இதில் நார்ச்சத்து,விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் அடங்கியிருக்கின்றன. இவை நம்முடைய ஹார்மோன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இவை நாம் உயரமாக வளர்வதற்கு ஒரு காரணியாக அமைந்திடும்.

கேரட் : கேரட்டில் அதிகப்படியான விட்டமின் ஏ மற்றும் சி இருக்கிறது. இவை இரண்டுமே எலும்புகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக இருப்பது. இவை கால்சியத்தை உறிந்து கொள்ளவும் எலும்புகளை உறுதியாகவும் வைத்திருக்கிறது. ஒரு நாளைக்கு மீடியம் சைஸ் கேரட் மூன்று கேரட் வரை சாப்பிடலாம்.

முழுதானியங்கள் : உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கிறது இந்த முழு தானியங்கள். உடலில் தேவையின்றி இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதோடு சாப்பிடும் உணவின் சத்துக்களை எளிதாக உடலில் சேரவும் வைக்கிறது. சில தானியங்களில் அதிகப்படியான கால்சியம் கூட கிடைக்கிறது. பருவ வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுக்க ஆரம்பித்தால் அவர்கள் உயரமாக வளர்வார்கள்.

முட்டை : உயரத்தை அதிகரிக்ககூடிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது இந்த முட்டை தான். இதில் விட்டமின் டி, கால்சியம் மற்றும் ரிபோஃப்லேவின் அடங்கியிருக்கிறது (riboflavin) இதில் இருக்கும் ப்ரோட்டீன் எலும்புகளின் வளர்ச்சிக்கும் அதன் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

பூசணி விதைகள் : இதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது.எலும்புகள் மற்றும் பற்கள் சீராக வளர்வதற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய விஷயம் மக்னீசியம். அதோடு பூசணி விதைகளில் இருக்கும் அமினோ அமிலங்கள் உயரத்தை கூட்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.14 1507980784 pcover 24 1464079199

 

Related posts

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு துவையல்

nathan

தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு சுடுதண்ணீர் குடியுங்கள்.

nathan

சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்

nathan

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா? தொிந்துகொள்ளுங்கள்…………..

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் எள் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் கொத்தவரங்காய்..!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…முருங்கைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் இதெல்லாம் நடக்குமா?

nathan

முள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

nathan