23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
monsoon facepack 15
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள் தெரியுமா!!!

மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். அதிலும் முகத்தை அழகுப்படுத்தவும், பொலிவுடன் வைக்கவும், பெண்கள் கடைகளில் விற்கும் பல செயற்கை முறையில் தயாரித்த பொருட்களை வாங்கி, முகத்தை மென்மைப் படுத்துகின்றனர். எதை பயன்படுத்தி முகத்தை மென்மை பயன்படுத்தினாலும், இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும். அவ்வாறு முகத்தை பொலிவாக்க செயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க ஒரு சில மூலிகைகள் இருக்கின்றன. இந்த மூலிகைகள் முகத்தை அழகுறச் செய்வதோடு பொலிவாக்கவும் செய்கின்றன. அது என்னனென்னவென்று சற்று படித்துப் பாருங்களேன்…

கற்றாழை : கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென்மையையும், பொலிவையும் தரும் குணமுடையது. இதற்கு முதலில் அந்த கற்றாழையில் ஜெல்லை முகத்திற்கு தினமும் தேய்த்து 3-4 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகமானது மென்மையை அடையும். மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் நீக்கும்.

சீமைத்துத்தி : இந்த மூலிகைச் செடியை அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்துவதை காணலாம். இந்த சீமைத்துத்தி இலையை நன்கு அரைத்து முகத்தில் தடவி, கழுவ வேண்டும். மேலும் இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்திற்கு பிரகாசத்தை தருகிறது. வேண்டுமென்றால் இந்த பேஸ்டில் சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, முகத்திற்கு, கழுத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை தடவினால், முகம் பொலிவு பெறும்.

லாவெண்டர் : இது மற்றொரு மூலிகைச் செடி. முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனை வைத்து சோப்பு, கிரீம் என்று பலவற்றை தயாரித்துள்ளனர். ஏனெனில் இதில் சருமத்திற்கு மென்மையைத் தரும் குணம் அதிகம் இருக்கிறது. வேண்டுமென்றால் லாவெண்டரை எடுத்து அரைத்து, அத்துடன் ஏதேனும் ஆலிவ் அல்லது பாதம் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி கழுவ வேண்டும். இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். லாவெண்டர் ஆனது அனைத்து சருமத்திற்கும் பொருந்தாது. ஆகவே இதனை செய்யும் முன், அந்த கலவையை சிறு பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தில் சிவப்பு நிறம் அல்லது புண் என்று எதுவும் நேராமல் இருந்தால் முகத்திற்கு பின் தடவலாம். மேற்கூரியவாறெல்லாம் செய்தால் முகமானது பொலிவுடன் பிரகாசமாக மின்னும். மேலும் மேலே சொன்ன பொருட்கள் அனைத்துமே கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை.

 

Related posts

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

மன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. அபார்ஷன் செய்தால் ஏற்படும் விளைவுகள்

nathan

அதிகம் சாப்பிட்டால் ஆபத்து… உஷார் நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

nathan

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

nathan

ஆண்களே! உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதை தடுக்க சில டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா?

nathan

உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan