23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
12 1507814191 ice pack 21 1458555559
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருதா? அப்ப இத படிங்க!

ஒருவரின் தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதாக பலர் நினைக்கின்றனர். இவை மட்டுமே காரணங்கள் அல்ல. வேறு சில காரணங்களாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்.

நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. இதனால் வைரஸ் பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.

பெண்களுக்கு அதிகம் ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. இதை வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி. மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தலையை முழுவதும் மூடக்கூடிய தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்குக் காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். டாக்டர் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளை கவனத்துடன் சாப்பிட்டு வர வேண்டும்.

பரிசோதனை தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் முதலில் சைனஸ் வகைகளில் ஒன்றான Sinusitis பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய மூக்கு எலும்பான Nasal Septum வளைவில்லாமல் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மூக்கு வளைந்து (deviation) இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்னை அடிக்கடி ஏற்படக்கூடும்.

தவிர்க்கவும் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும். எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவர் பிற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளாலும், அலர்ஜி காரணமாகவும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளலாம். எதனால் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை தெரிந்து கொள்ள அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பிக்க வேண்டும். குறிப்பாக, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக்கொண்டு சிகிச்சையை தொடர வேண்டும்.

தேவையான பொருட்கள் 1.சிவப்பு நிற வெங்காயம் – அரை கிலோ 2.நாட்டு சர்க்கரை (பிரவுன் சுகர்) – அரை கிலோ 3.எலுமிச்சை – 2 4.தேன் – ஏழு டீஸ்பூன் 5.ஒன்று அரை லிட்டர் தண்ணீர்

செய்முறை அடி கனமான, அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மிதமாக சூடேறியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் நாட்டுச் சர்க்கரை பிரவுன் கலர் மாறும் வரை கிளறி, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு பின் தண்ணீரையும் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டிலேயே மூன்றில் ஒரு பாகம் வரும் வரை கலவையை சூடாக்க வேண்டும். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து அதில் எலுமிச்சை சாறையும், தேனையும் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

காலம் இந்த ஜூஸை தினமும் சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு முன் ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். சளியின் தாக்கம் உடலில் குறைவதை ஒரே வாரத்தில் நாம் உணரலாம். நமது நுரையீரலில் சளியின் தாக்கம் குறைந்து மூச்சு சீராகும் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம். மேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் உணவே மருந்தாக நம் உடலில் செயல்படுவதால் நவீன மருத்துவரோ- மருந்தோ இன்றி, பக்க விளைவுகள் இன்றி நம்மை முழுவதும் சளியின் பிடியில் இருந்து மீட்கும்.

துளசி 1. கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும். 2. திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும். 3. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

கிராம்பு 1. கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும். 2. நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 3. துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

தலைவலிக்கு 1. கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்., 2. வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும். 3. முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும். 4. கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

வெற்றிலை 1. இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும். 2. வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும். 3. சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும். 4. மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும். 5. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

தலைவலி

Related posts

காதலை ஏற்பதா? வேண்டாமா? அதிரடியான ஒரு பரிசோதனை

nathan

வாழைத்தண்டு.வாழைப்பூ: மருத்துவ நன்மைகள் தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிஞ்சிகோங்க

nathan

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கசாயம்…

nathan

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

nathan

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சிகரெட்டால் வரும் நோய்கள்

nathan

ஹார்மோன் மாற்றங்கள் உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

nathan

கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க

nathan